(3 / 6)ஏ.வி.எம் நிறுவனத்தின் நிலை:உண்மையிலேயே என்ன நடந்தது. ஏ.வி.எம் ஸ்டுடியோவே அடியோடு மாறிப்போயிடுச்சு. அதற்குக் காரணம் என்னவென்றால், அன்றைக்கு இருந்த கலைஞர்கள், இயக்குநர்கள் இடையே திட்டமிடல் சரியாகத்தான் இருக்கும். ரிலீஸ் தேதியை சொல்லிட்டுப் பூஜை போடுவாங்க. அதை நம்பிதான் டிஸ்டிரிபியூட்டர் எல்லாம் பணம்கட்டுவாங்க. ஜனவரி மாதம் பூஜை போடுறாங்க என்றால், ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்திடுவாங்க. அதை நம்பி எல்லாருமே வேலைசெய்வாங்க. பெரிய நடிகர்கள் எல்லாருமே கால்ஷீட் கொடுத்திடுவாங்க. எவ்வளவு நடிகர்களை உருவாக்கி இருப்பாங்க. ஹிந்தி நடிகர் ராஜ் கபூர், சிவாஜி கணேசன், கமல்ஹாசனில் இருந்து பல பேரை உருவாருக்கி இருப்பாங்க. கன்னட நடிகர் ராஜ்குமாரை அறிமுகப்படுத்தினது ஏ.வி.எம். தான். வைஜெயந்தி மாலாவை அறிமுகப்படுத்தினது, ஏ.வி.எம். ஸ்டுடியோ தான். விஜயகுமாரி, நமீதா, ரம்பா போன்ற பல படங்களை ஹீரோயினியாக அறிமுகப்படுத்தினது, ஏ.வி.எம். தான். பல ஹீரோக்கள், பல டெக்னீஷியன், பல இயக்குநர்களை உருவாக்கி இருப்பாங்க. அப்பேர்ப்பட்ட நிறுவனம், இன்றைக்கு படம் எடுக்காமல் இருக்குன்னு சொல்லி தான் பல பேர் கேட்கிறாங்க. அல்லி அர்ஜூனாவில் இருந்து சிவாஜி மற்றும் முதல் இடம் வரை 176 படங்கள் தயாரித்து இருக்காங்க. இவ்வளவு படம் ஏ.வி.எம். எடுத்திருக்காங்க.