தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Seenu Ramasamy: ‘எப்படி பொய்யை இவ்வளவு தைரியமா சொல்றாரு..’ - சீனுராம சாமியை வெளுத்த மனிஷா!

Seenu Ramasamy: ‘எப்படி பொய்யை இவ்வளவு தைரியமா சொல்றாரு..’ - சீனுராம சாமியை வெளுத்த மனிஷா!

Nov 27, 2023, 06:53 PM IST

சீனுராமசாமி மீது பாலியல் குற்றசாட்டை முன் வைத்த மனிஷா, அந்த விவகாரம் குறித்து விரிவாக பேசி இருக்கிறார். 

(1 / 7)

பிரபல விமர்சகர் பிஸ்மி, இயக்குநர் சீனுராமசாமி ‘இடம் பொருள், ஏவல்’ திரைப்படத்தின் போது, அந்த படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆகியிருந்த நடிகை மனிஷாவிற்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என்ற குற்றசாட்டை முன்வைத்தார்.  அந்த குற்றசாட்டை சீனு ராமசாமி மறுத்ததோடு, அந்த படத்திற்கு பிறகு நடந்த ஒரு குப்பைக்கதை பட நிகழ்வில், மனிஷா தனக்கு நன்றி தெரிவித்திருப்பதாக கூறி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
(2 / 7)

அதற்கு மனிஷா அது மரியாதை நிமித்தமாகவே சொல்லப்பட்டது என்று விளக்கம் அளித்தார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மனிஷா டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
(3 / 7)

அந்த பேட்டியில், “கடந்த வாரம், எனக்கு சீனுராமசாமி அலுவலகத்தில் இருந்து போனில் அழைப்பு வந்தது. அதில் படம் ஒன்றில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அது எனக்கு விசித்திரமாக இருந்தது. இடம், பொருள், ஏவல்’ திரைப்படத்தில் எனக்கு இழைக்கப்பட்டதும், அந்த படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டதும், நான் சீனு ராமசாமியிடம் பணிவாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காகவும், அவர் செய்த எல்லாவற்றுக்கும் நான் அனுமதி தராததுமே ஆகும்.  
(4 / 7)

எல்லாமே திடீரென்று நடந்து விட்டது. நான் இந்த விஷயத்தை பற்றி திரைத்துறையில் யாரிடமும் பெரிதாக பேசவில்லை. காரணம், அதில் நான் உடைந்து போயிருந்தேன். ஆனால் அவர்தான் திரைத்துறையில், எனக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
(5 / 7)

இந்த விவகாரத்திற்கு பிறகு, நான் அவருக்கு நன்றி சொன்னதாக ட்வீட் செய்திருக்கிறார். ஒரு குப்பைக்கதை பட நிகழ்வில் எல்லோருக்கு நன்றி சொல்வது போலதான் அவருக்கும் நன்றி சொன்னேன். அது மரியாதை நிமித்தமாக சொன்னது. இந்த குற்றசாட்டுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில், அவர் சில பதிவுகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனை பார்த்த போது, அவருக்கு இந்தளவு அநியாயமாக பொய் செல்வதற்கு எப்படி இப்படி தைரியம் வந்தது? என்ற கேள்வி எழுந்தது. இது அவமரியாதைக்குரியது. 
(6 / 7)

அவர் பெரிய இயக்குநர் என்பதால், அவர் அழைத்த உடன் நான் இந்தப்படத்தில் நடித்து விடுவேன் என்று எண்ணிவிட்டாரோ என்னமோ? அது மிகவும் இழிவானது. என்னை அழைக்கும் இயக்குநர்கள் அதிகபட்ச திறமையை கொண்டிருந்த போதும், அவர்களுக்கு மனிதராக தார்மீக உணர்வு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு நான் மதிப்பு அளிக்க மாட்டேன். நான் இது பற்றி பேசிக்கொண்டே இருக்கப்போவதில்லை.” என்று பேசியிருக்கிறார்
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை