தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Maniratnam: ‘அண்ணனையே கொன்னவன் மணிரத்னம்.. இரக்கமே இல்லாம..நான் மட்டும் அன்னைக்கு இருந்திருந்தா’ - மாணிக்கம் நாராயணன்

Maniratnam: ‘அண்ணனையே கொன்னவன் மணிரத்னம்.. இரக்கமே இல்லாம..நான் மட்டும் அன்னைக்கு இருந்திருந்தா’ - மாணிக்கம் நாராயணன்

May 14, 2024, 03:57 PM IST

Maniratnam: ஜிவியின் தற்கொலையில் மணிரத்னத்திற்கும் பங்கு இருக்கிறது - மாணிக்கம் நாராயணன்

Maniratnam: ஜிவியின் தற்கொலையில் மணிரத்னத்திற்கும் பங்கு இருக்கிறது - மாணிக்கம் நாராயணன்
Maniratnam: ‘அண்ணனையே கொன்னவன் மணிரத்னம்.. இரக்கமே இல்லாம..நான் மட்டும் அன்னைக்கு இருந்திருந்தா’ - மாணிக்கம் நாராயணன்
(1 / 8)

பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் மணிரத்னம் மற்றும் அவரது சகோதரர் ஜிவி வெங்கடேஷ்வரன் தற்கொலை குறித்து ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “ ஜிவி சாரின் இறப்பிற்கு மணிரத்னமும் ஒரு காரணம். ஜிவி சாரும், நானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஜி வி சாருக்கு நான் நிறைய உதவிகள் செய்திருக்கிறேன். ஜிவி சார் என்னை தினமும் என்னுடைய அலுவலகத்தில் வந்து சந்திப்பார்.  
(2 / 8)

சந்திக்க வந்த ஜிவி காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் வந்து கொண்டே இருந்தார். ஒரு நாள் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. உடனே அவரிடம், நீங்கள் யானை போன்ற மிகப் பெரிய தயாரிப்பாளர். நான் உங்களை ஒப்பிடும்போது, கொசு போன்றவன். அப்படி இருக்கும் பொழுது, நீங்கள் என்னை தேடி வர வேண்டிய கட்டாயம் என்ன என்று கேட்டேன். அவர் உடனே என்னிடம், நீ ஒரு வாக்கு கொடுத்தாய் என்றால், அதை எப்படியேனும் நிறைவேற்றி விடுவாய். இந்த துறையில் உன்னை மாதிரியான நபர்கள் கிடையாது.  
(3 / 8)

அண்ணனை கொன்ற மணிரத்னம்ஆகையால் நீ என்னை வந்து பார்க்க வரக்கூடாது. நான் தான் உன்னை வந்து பார்க்க வேண்டும் என்று சொன்னார்.  திடீரென்று ஒரு மூன்று நாட்கள் ஜிவி காணாமல் போய்விட்டார். இதையடுத்து அவரது வீட்டார் என்னை தேடி ஓடி வந்தார்கள். நானும், எனக்கு தெரியாது என்று சொல்லி, தொடர்ந்து ஒரு நாள் மட்டும் பொறுமையாக இருங்கள் என்று சொன்னேன். அந்த நாளின் மதிய வேளையில் ஜிவி சார் எனது வீட்டிற்கு காரில் வந்து விட்டார். உடனே நான் அவரிடம் என்ன சார் இது? இப்படி செய்து விட்டீர்கள் என்று கேட்டேன். இந்த நிலையில் அவர் அவரது பிரச்சினைகளை சொன்னார். மேலும், நான் தற்கொலை செய்து கொள்ளத்தான் சென்றேன் என்று கூறினார்.   
(4 / 8)

உடனே நான் அவரிடம் சார் பைத்தியக்காரத்தனமாக பேசாதீர்கள் என்றேன். என்னால் முடிந்த உதவிகளை எல்லாம் அவருக்கு செய்தேன். அவர் ஒருநாள் திடீரென்று அறுபது லட்ச ரூபாய்க்கு என்னிடம் இரண்டு செக்குகளை கேட்டார். நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன். ஆனால் அவர் சும்மா போட்டு தாருங்கள் என்று கேட்டார். இதனையடுத்து நான் அவரிடம் அந்த செக்கிற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. 
(5 / 8)

அவர் ஏதோ ஒரு ஆபத்து கால பிரச்சனைக்கு, அந்த செக்கை வாங்கி இருக்கிறார் என்று எழுதி வாங்கிவிட்டு, அதனை கொடுத்தேன்.அவரது மகனுக்கு அப்போது கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அவருக்கு பணம் கொடுத்தவர்கள், அவரை டார்ச்சர் செய்ய, அவர் என்னிடம் வாங்கிய செக்கை காண்பித்திருக்கிறார் எதிர்தரப்பிற்கு என் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக, அவரை அப்போது விட்டு விட்டார்கள் அவரும் கல்யாணத்தை நடத்தி விட்டார்.நான் அந்த நேரத்தில் கோலாலம்பூர் செல்ல வேண்டிய இருந்த காரணத்தால், நான் அங்கு சென்று விட்டேன். 
(6 / 8)

இந்த நிலையில் தான் ஜிவி என்னுடைய வீட்டிற்கு போன் செய்திருக்கிறார். அதனை, என்னுடைய மனைவி எடுத்திருக்கிறார். அவள் விஷயத்தை இவ்வாறாக சொல்ல, போனை வைத்துவிட்டு, அவர் தூக்கில் தொங்கி விட்டார். அப்பேர்ப்பட்ட தயாரிப்பாளரை எந்த நடிகனும் காப்பாற்றவில்லை. 
(7 / 8)

நீங்கள் சார் என்று சொல்கிறீர்களே மணிரத்னம்.. அவர் கூட காப்பாற்றவில்லை. அவரிடம் நான் கூட சொன்னேன். மணியிடம் நான் பேசுகிறேன். அவன் ஒரு படம் உங்களுக்கு செய்து கொடுத்தால், நீங்கள் கடனிலிருந்து வெளியே வந்து விடலாம் என்றேன். அதற்கு அவர் மணியெல்லாம் ஒரு மனுஷனே கிடையாது. அவனைப் பற்றி எல்லாம் பேசாதே அவனிடம் மனிதாபிமானமே கிடையாது என்று சாடினார்” என்று பேசினார்.
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை