(2 / 6)கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் - ஸ்ட்ராபெரிகளில் கலோரிகள் குறைவு, இதில் நார்ச்சத்துக்கள் அதிகம். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, இதில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட் வடிவத்தில் உள்ளதால், இதை உடல் செயல்படுத்த முடியாது. இது உங்கள் செரிமான மண்டலம் வழியாகச் சென்று, உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. ஸ்ட்ராபெரிகளில் உள்ள நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை முறைப்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் இருந்தால், உடல் எடையைக் குறைக்க உங்களுக்கு சாப்பிடவேண்டும் என் தோன்றும்போது ஸ்ட்ராபெரிகளை சாப்பிடுங்கள்.