தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lok Sabha Election 2024 Results: தமிழக பாஜக நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதி நிலவரம் என்ன?

Lok Sabha Election 2024 Results: தமிழக பாஜக நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதி நிலவரம் என்ன?

Jun 04, 2024, 01:19 PM IST

Lok Sabha Election 2024 Results: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • Lok Sabha Election 2024 Results: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
(1 / 6)

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். கோவை மக்களவைத் தொகுதியின் தற்போதைய நிலவரப்படி, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 46,086 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 33,898 வாக்குகள் பெற்று 12,188 வாக்குகள் பின்தங்கி உள்ளார். அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 20289 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் கலாமணி ஜெகநாதன் 6,203 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
(2 / 6)

மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிட்ட நீலகிரி மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். நீலகிரி தொகுதியின் தற்போதைய நிலவரப்படி, திமுக வேட்பாளர் ஆ.ராசா 18,0915 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக சார்பில் போட்டியிட்ட எல்.முருகன் 96484 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
(3 / 6)

முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட்ட தென் சென்னை தொகுதியிலும் பாஜக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. தென் சென்னை தொகுதியின் தற்போதைய நிலவரப்படி, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 50,641 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் தமிழிசை 26897 வாக்குகள் பெற்று 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
(4 / 6)

நெல்லை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை மக்களவைத் தொகுதியின் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 122424 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 82,692 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
(5 / 6)

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோச் பி.செல்வம் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் தற்போதைய நிலவரப்படி, திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 79,406 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். வினோச் பி.செல்வம் 37,938 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். சுமார் 41,468 வாக்குகள் கூடுதலாக பெற்று தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை