Lord Rahu: ராகுவால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்..!
Dec 29, 2023, 05:28 PM IST
ராகு பகவானால் 2024 ராஜயோகம் பெறும் ராசிகளை காண்போம்.
நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் தான் இருப்பார். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.
ராகு பகவான் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகிறார். வரும் 2024 ஆண்டு முழுவதும் பயணம் செய்ய உள்ளார். ராகு பகவானின் பயணம் நீண்ட காலம் என்பதால் இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
ராகு பகவானால் மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் யார் என்பது குறித்து இங்கே காணலாம்.
கும்ப ராசி
வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. ராகு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது மரியாதை அதிகரிக்கும். முக்கியமான நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம் ராசி
ராக்கு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
ரிஷப ராசி
ராகு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் புதிய முயற்சிகள் கைகூடும். புதிய முதலீடுகள் இரட்டிப்பான லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9