(6 / 7)எரிச்சல் கிளப்பிய ரஜினிகாந்த் இதையடுத்து எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளரிடம் ரஜினி சார், ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்க, அவர் அது விதியாக இருக்கிறதே சார் என்று கூற, ரஜினி சார் விதியை போட்டதே நான் தான். நான் அதை உடைக்கலாம்… என்று கூறி, வாங்க கிருஷ்ணன்…நாம் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி அங்கிருந்த மாடிக்கு அழைத்துச் சென்றார். போட்டோ எடுக்கப்போகும் போது, என் தோள் மீது கை போடுங்கள் என்று கூறினார். நான் அப்படியே அதிர்ந்து நின்று விட்டேன். நான் எப்படி சார் உங்கள் தோள் மீது கை போட முடியும் என்று கேட்டதற்கு, ரஜினி சார், உங்களை எத்தனை வருடங்களாக எனக்குத் தெரியும். நீங்கள் எனக்கு சிகரெட்டெல்லாம் வாங்கி கொடுத்து இருக்கிறீர்கள்… என்ன மறந்து விட்டீர்களா என்று சொன்னார். மேலும் நாம் இங்கு நின்று போட்டோ எடுப்பதற்கு காரணம், கீழே இருக்கும் கவுண்டமணி உள்ளிட்ட கலைஞர்களுக்கு, நீங்கள் என்னுடன் போட்டோ எடுக்கிறீர்கள் என்பது தெரிய வேண்டும். காரணம், நான் அவர்களுக்கு போட்டோ கொடுக்கவில்லை என்று கூறினார்.