(2 / 6)நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராமின் திருமணம் குருவாயூர் கோயிலில் வருகிற 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னையை அடுத்த மதுரவாயலில் நடந்த திருமணத்துக்கு முந்தைய மணமக்கள் அறிமுக நிகழ்ச்சியில், ஜெயராமும் அவரது மனைவியும் தங்களது மருமகள் தாரிணி காலிங்கராயரை அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தனர்.அப்போது மேடையில் பேசிய நடிகர் ஜெயராமன், ''எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், இசைக்கலைஞர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். குறிப்பாக, இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது தந்தை மற்றும் அவரது ஒட்டுமொத்தக் குழுவும் இங்கு வந்து எங்களுக்காக இன்னிசைக்கச்சேரி செய்துகொடுக்கிறதுக்கு நன்றி. ரொம்ப சந்தோஷம். என்னைப் பொறுத்தவரைக்கும் என் வாழ்வில் மிக சந்தோஷமான நாள் இது என்று சொல்லிக்கலாம். காளியோட கல்யாணம் என்பது எங்களுக்கு எல்லாம் ஒரு கனவு'’.