(2 / 6)இதுதொடர்பாக ஆகாயம் சினிமாஸ் யூட்யூப் சேனலுக்கு பத்திரிகையாளர் சங்கர் அளித்த பேட்டியில், ‘’விகடன் சமீபத்தில் வெளியிட்ட எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவே ஒரு செட் அப். முதலில் இந்தப் புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, அதை ராகுல் காந்தி பெற்றுக்கொள்ள, திருமா அதில் பங்கேற்பதாக தான் இருந்தது. முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் அதில் கலந்துக்க முடியல. அடுத்து ராகுல் காந்திக்கும் பங்கேற்க முடியாத நிலை. அதன்பின், விகடன் விஜயை நோக்கிப் பயணித்ததால் திருமாவளவன் திட்டமிட்டே அந்த நிகழ்வைத் தவிர்த்திட்டார்.அப்படி விகடன் விஜய்க்கு மேடை அமைச்சு கொடுத்தது. த.வெ.க முதல் மாநாட்டுக்குப் பின், விஜயை யாரும் எங்கும் பேச அழைக்கவில்லை. அதனால், விஜய் விகடன் மேடைக்கு வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின், விஜய் அரசியலில் ஆழமான புரிதல் இல்லாத நபர் என்ற பார்வை வந்திடுச்சு எல்லாருக்கும். அந்தப் புத்தகத்தை முழுமையாக படிச்சிருந்தால் விஜய், அம்பேத்கரை பற்றி நன்கு பேசியிருக்கமுடியும். மட்டமான கூட்டணி அரசியலை மட்டும் பேசிட்டுப்போயிட்டாங்க. உண்மையிலேயே அம்பேத்கர் பற்றி நினைத்திருந்தால், அவரைப் பற்றி நிறைய பேசியிருக்கலாம். கூட்டணியை உடைக்கிறதுக்கா கட்சி ஆரம்பிச்சிருக்கீங்க''.