தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அன்றாடம் நாம் உட்கொள்ளும் ஒன்றுதான்; இதனால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்று பாருங்கள்!

அன்றாடம் நாம் உட்கொள்ளும் ஒன்றுதான்; இதனால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்று பாருங்கள்!

Oct 27, 2024, 06:30 AM IST

அன்றாடம் நாம் உட்கொள்ளும் ஒன்றுதான்; இதனால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்று பாருங்கள்!

  • அன்றாடம் நாம் உட்கொள்ளும் ஒன்றுதான்; இதனால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்று பாருங்கள்!
வைட்டமின் பி6 அளவு - உங்கள் உடல் உணவை ஆற்றலாக மாற்ற வைட்டமின் பி6 உதவுகிறது. இது செரோட்டினின் மற்றும் டோப்பமைன் போன்ற நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை உற்பத்தி செய்கிறது. இது ஹீமோகுளோபினை உற்பத்தி செய்து ரத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எனவே தினமும் காலையில் வாழைப்பழங்களை உட்கொள்வது உங்கள் உடலுக்குத் தேவையான பி6 அளவைக் கொடுக்கிறது.
(1 / 8)

செரிமான கோளாறுகளை இயற்கையாகவே குறைக்கிறது - இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கோளாறுகள் நிறைந்த வயிற்றுக்கு இதமளிக்கிறது. வாழைப்பழங்களில் பெக்டின் உள்ளது. இது கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. இது நல்ல குடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு காலையில் எடுத்துக்கொள்ள உகந்த சிறந்த பழம் ஆகும்.
(2 / 8)

சரும ஆரோக்கியத்துக்கு தேவையான மெக்னீசியச் சத்துக்களைக் கொடுக்கிறது - வாழைப்பழங்களில் உள்ள மெக்னீசியச் சத்துக்கள் உங்கள் சருமத்தில் கொலாஜென் உற்பத்திக்கு உதவுகிறது. இது உங்கள் சருமத்தை இளமைத் தோற்றத்துடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே உங்கள் காலை உணவாக வாழைப்பழங்கள் இருப்பது, உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. உங்கள் சருமத்துக்குத் தேவையான பொலிவையும் கொடுக்கிறது.
(3 / 8)

உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது - வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் இயற்கை சர்க்கரை உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை தொடர்ந்து கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு திடீரென்று பசி ஏற்பட்டால் அதை தடுக்க உதவுகிறது. உங்கள் நாளை துவங்க சிறப்பானது வாழைப்பழங்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ்கள் சாப்பிடுவதை தடுக்கிறது.
(4 / 8)

கொழுப்பு இல்லாத ஸ்னாக்ஸ் - வாழைப்பழங்களில் இயற்கையில் கொழுப்பு இல்லை. இவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால், உங்களுக்கு கொழுப்பை குறைக்க உதவுகிறது. உங்களின் வயிற்றை நிரப்பும் ஒரு ஸ்னாக்ஸாகவும் உள்ளது. பல காலை உணவுகளில் அதிகம் கொழுப்பு இருக்கும். ஆனால், இதில் கொழுப்பு இல்லை. உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக்கொடுத்து, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது சுவையும் நிறைந்தது.
(5 / 8)

தசை இயங்க பொட்டாசியச் சத்துக்கள் - வாழைப்பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு வலிகளைப் போக்க உதவுகிறது. இது உங்கள் தசைகள் வழக்கம்போல் இயங்க உதவுகிறது. குறிப்பாக நீங்கள் காலையில் உடற்பயிற்சி செய்பவர் என்றால் உங்கள் தசைகள் நல்ல முறையில் இயங்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள், உங்களின் தசை ஆரோக்கியத்தைக் காக்கிறது. இது வியர்வையால் இழக்கும் எலக்ட்ரோலைட்களை உடல் தக்கவைக்க உதவுகிறது.
(6 / 8)

அமில அளவு - இதில் உள்ள இயற்கை ஆன்டாசிட் குணங்கள், வாழைப்பழங்கள், அமில பிரச்னைகளை ஏற்படுத்துவதை குறைக்க உதவுகிறது. வயிற்றில் அமில அளவை முறைப்படுத்தவும் உதவுகிறது. நெஞ்செரிச்சல் மற்றும் மற்ற செரிமான கோளாறுகளுக்கு சிறந்தது. இதன் இதனமான மற்றும் மிருதுவான குணங்கள், வயிற்றில் உள்ள எண்ணற்ற பிரச்னைகளுக்கு தீர்வு தருகின்றன.
(7 / 8)

நினைவாற்றலை அதிகரிக்கிறது - டிரிப்டோபாஃன், என்ற அமினோ அமிலம், உடலில் செரோடினின் உற்பத்திக்கு காரணமாகிறது. இதுதான் வாழைப்பழங்களை மூளைக்கு உகந்ததாக மாற்றுகிறது. இது உங்கள் கவனத்தை அதிகரிக்கவும், நல்ல மனநிலையை ஏற்படுத்தி தரவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. இவையனைத்தையும் செரோடினின் என்ற ஃபீல் குட் நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் செய்கின்றன.
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை