தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aadi Pournami: திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

Aadi Pournami: திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

Jul 21, 2024, 06:10 AM IST

Aadi Pournami 2024: ஆடி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்? கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது ? என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

  • Aadi Pournami 2024: ஆடி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்? கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது ? என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமானே அண்ணாமலையாராகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
(1 / 7)

மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
(2 / 7)

'கிரி' என்றால் 'மலை', 'வலம்' என்றால் 'மெதுவாக மலையை சுற்றுதல்' என்று பொருள்படும். தமிழகத்தை பொறுத்தவரை பல இடங்களில் பவுர்ணமி நாளன்று கிரிவலம் நிகழ்வு நடந்தாலும், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரை பக்தர்கள் பக்தியோடு சுற்றி வருவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
(3 / 7)

திருவண்ணாமலையை சுற்றி பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாகவும், இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மலையைச் சுற்றும்போது இறை அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக பவுர்ணமி தினத்தன்று வலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
(4 / 7)

மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
(5 / 7)

அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் வந்தால் நாம் விரும்பும் சித்திகள் நம்மை வந்தடையும். நள்ளிரவில் கிரிவலம் வந்தால் அஷ்டமா சித்திகள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
(6 / 7)

கிரிவலம் செல்லும் போது பயபக்தியோடு பொறுமையாக பயபக்தியோடு நடந்து வரவேண்டும். கிரிவலம் செல்வதால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் சித்தர்களின் அருளானது கிடைக்கும். ஆன்மிக நன்மைகளை தாண்டி, மன அழுத்தம், கவலைகள் குறைந்து, உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுமாம்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை