தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Indonesia Flood: திடீர் கனமழை வெள்ளத்தில் சிக்கி 58 பேர் பலி; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்

Indonesia Flood: திடீர் கனமழை வெள்ளத்தில் சிக்கி 58 பேர் பலி; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்

May 15, 2024, 05:03 PM IST

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 58 பேர் பலியாகினர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 58 பேர் பலியாகினர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
(1 / 8)
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.(AFP)
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 
(2 / 8)
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. (AFP)
மேலும், வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
(3 / 8)
மேலும், வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.(AFP)
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள தானா டாடரில் திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவரின் உடலை மீட்புக் குழுவினர் சுமந்து செல்கின்றனர்.
(4 / 8)
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள தானா டாடரில் திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவரின் உடலை மீட்புக் குழுவினர் சுமந்து செல்கின்றனர்.(AP)
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள எரிமலையின் சரிவுகளில் பெய்த கனமழை மற்றும் குளிர்ந்த லாவா மற்றும் சேறு ஆகியவை திடீர் வெள்ளப்பெருக்கைத் தூண்டியதால் பலர் உயிரிழந்தனர் மற்றும் காணாமல் போயினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
(5 / 8)
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள எரிமலையின் சரிவுகளில் பெய்த கனமழை மற்றும் குளிர்ந்த லாவா மற்றும் சேறு ஆகியவை திடீர் வெள்ளப்பெருக்கைத் தூண்டியதால் பலர் உயிரிழந்தனர் மற்றும் காணாமல் போயினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்(AFP)
இந்த ட்ரோன் படம், இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள தானா டாதரில் திடீர் வெள்ளத்தால் சேதமடைந்த கட்டிடங்களைக் காட்டுகிறது.
(6 / 8)
இந்த ட்ரோன் படம், இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள தானா டாதரில் திடீர் வெள்ளத்தால் சேதமடைந்த கட்டிடங்களைக் காட்டுகிறது.(AP)
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களை நீரில் மூழ்கின. 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
(7 / 8)
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களை நீரில் மூழ்கின. 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.(REUTERS)
புதன்கிழமைக்குள் 58 சடலங்கள் மண் மற்றும் ஆறுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும், பெரும்பாலும் மோசமாக பாதிக்கப்பட்ட அகம் மற்றும் தானா தாதர் மாவட்டங்களில் இருந்து, காணாமல் போனதாகக் கூறப்படும் 35 பேரை மீட்புப் படையினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
(8 / 8)
புதன்கிழமைக்குள் 58 சடலங்கள் மண் மற்றும் ஆறுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும், பெரும்பாலும் மோசமாக பாதிக்கப்பட்ட அகம் மற்றும் தானா தாதர் மாவட்டங்களில் இருந்து, காணாமல் போனதாகக் கூறப்படும் 35 பேரை மீட்புப் படையினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (AP)
:

    பகிர்வு கட்டுரை