தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Suryakumar Yadav Record: கோலியை முந்தும் சூர்யகுமார் யாதவ்! டி20 கிரிக்கெட்டில் மற்றொரு மைல்கல் சாதனை

Suryakumar Yadav Record: கோலியை முந்தும் சூர்யகுமார் யாதவ்! டி20 கிரிக்கெட்டில் மற்றொரு மைல்கல் சாதனை

Jul 31, 2024, 09:00 PM IST

Suryakumar Yadav: டி20 சர்வதேச போட்டிகளில் தொடர் நாயகன் விருதுகளை வென்றவர்கள் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த லிஸ்டில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளதால் கோலியின் சாதனையை சூர்யகுமார் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

  • Suryakumar Yadav: டி20 சர்வதேச போட்டிகளில் தொடர் நாயகன் விருதுகளை வென்றவர்கள் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த லிஸ்டில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளதால் கோலியின் சாதனையை சூர்யகுமார் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா தொடரை முழுமையாக வென்றதுடன், அணியின் புதிய டி20 கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார் தொடர் நாயகன் விருதை வென்றார். இதன் மூலம் அவர் எலைட் லிஸ்டுக்கும் முன்னேறியுள்ளார். டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை அவர் ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் மொத்தம் 92 ரன்கள் எடுத்ததோடு, இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்
(1 / 5)

இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 26 பந்துகளில் 58 ரன்கள், இரண்டாவது போட்டியில் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியில் 8 ரன்கள் மட்டும் எடுத்தபோதிலும், பவுலிங்கில் கலக்கிய அவர் 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்
(2 / 5)

டி20 சர்வதேசப் போட்டிகளில் தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர்களில் சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோரும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் தற்போது டி20 தொடரில் 5 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர்
(3 / 5)

டி20 போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் வென்ற லிஸ்டில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். இவர் 6 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். அத்துடன் டி20 போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் சூர்யகுமார் யாதவ் அவரை முந்தும் இந்திய வீரராக திகழ்வார்
(4 / 5)

சூர்யகுமார் யாதவ் இதுவரை 71 டி20 போட்டிகளில் விளையாடி 42.67 சராசரியுடன், 2,432 ரன்கள் எடுத்துள்ளார். அவரது செயல்திறன் அணியில் நிலைத்தன்மையை பலப்படுத்தியது. அத்துடன் உலகளவில் வலுவான டி20 வீரர்களில் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார்
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை