தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vinayagar Idols Immersion: ஊர்வலமாக சென்று கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Vinayagar idols immersion: ஊர்வலமாக சென்று கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Sep 05, 2022, 09:39 AM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட்டது.

  • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த மாதம் 31ம் தேதி விளாத்திகுளம், கோவில்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
(1 / 9)

இந்த சிலைகளை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக வாகனங்களில் கொண்டுவரப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
(2 / 9)

அப்போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமியர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
(3 / 9)

இதனைத் தொடர்ந்து இந்த ஊர்வலம் மதுரை சாலை, கீழரதவீதி வழியாக வேம்பார் கடற்கரையை சென்றடைந்தது.
(4 / 9)

சிலைகளை எடுத்த வந்த வாகனங்களை போலீசார் குறிப்பு எடுத்து வைத்தனர். ஒவ்வொரு வாகனத்துக்கும் இரண்டு போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
(5 / 9)

விநாயகர் சிலைகள் புறப்பட்ட இடத்தில் இருந்து கடலில் கரைக்கப்படும் இடம் வரை போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
(6 / 9)

வேம்பார் கடற்கரையில் விநாயகர் சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
(7 / 9)

விளாத்திகுளத்தில் நிறுவப்பட்டிருந்த 64 விநாயகர் சிலைகள், கோவில்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 58 சிலைகள் என மொத்தம் 122 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.
(8 / 9)

விநாயகர் சிலைகள் கரைப்பை முன்னிட்டு, விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடி விரைவுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை