தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Navratri Golu: வாழ்க்கையை மாற்றப் போகும் கொலு..எந்த படியில் என்ன பொம்மை வைக்கலாம்?

Navratri Golu: வாழ்க்கையை மாற்றப் போகும் கொலு..எந்த படியில் என்ன பொம்மை வைக்கலாம்?

Oct 17, 2023, 08:13 PM IST

நவராத்திரி துவங்கியுள்ள நிலையில், வாழ்க்கையில் படிப்படியாய் முன்னேற்றம் தரும் கொலு படிகள் எப்படி அமைக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

  • நவராத்திரி துவங்கியுள்ள நிலையில், வாழ்க்கையில் படிப்படியாய் முன்னேற்றம் தரும் கொலு படிகள் எப்படி அமைக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். கொலு படிகள் எப்படி அமைக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
(1 / 9)
கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். கொலு படிகள் எப்படி அமைக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.(Getty Images)
நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. கொலு வைக்கும் போது 5, 7, 9 என்ற ஒன்றை எண்ணிக்கை கணக்கில் படி அமைக்கின்றனர். 9 படிகள் அமைப்பது பொருத்தமானதாக இருக்கும். நவராத்திரி துவக்க நாளன்று காலையில் கலச பூஜை செய்து மேல் படியில் வைத்து விட வேண்டும்.
(2 / 9)
நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. கொலு வைக்கும் போது 5, 7, 9 என்ற ஒன்றை எண்ணிக்கை கணக்கில் படி அமைக்கின்றனர். 9 படிகள் அமைப்பது பொருத்தமானதாக இருக்கும். நவராத்திரி துவக்க நாளன்று காலையில் கலச பூஜை செய்து மேல் படியில் வைத்து விட வேண்டும்.(Getty Images)
அடுத்து, ராமபிரான் வனவாசம் செய்ததை நினைவுபடுத்தும் விதமாக மலைகள், மரங்கள், செடி கொடிகளை அமைக்க வேண்டும். தொடர்ந்து கீழிருந்து மேலாக முதல் இரண்டு படிகளில் விசேஷமான தெய்வ மரங்களை அமைக்க வேண்டும். இவற்றுக்கு ஓரறிவுள்ள பிரதிமைகள் என்று பெயர்.
(3 / 9)

3-வது படியில் கரையான், எறும்பு, சிலந்தி உள்ளிட்ட சுறுசுறுப்பாக இயங்கும் மூன்றறிவு உயிரினங்களை வைக்கலாம்.
(4 / 9)

4-வது படியில் நான்கு அறிவுள்ள பறந்து சென்று தன் பணிகளை செய்கிற பறவை உள்ளிட்ட உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
(5 / 9)

6-வது படியில் ஆறறிவு படைத்த ஆன்மாக்களான மனித வடிவங்கள், அறிவை வெளிப்படுத்துகிற நாதஸ்வர வித்வான்கள், வீணை இசைக்கும் பெண்மணி, ஆடலரசிகள், நாட்டியக்கலை பெண்மணிகள் உள்ளிட்ட பொம்மைகளை வைக்கலாம்.
(6 / 9)

7-வது படியில் தவசீலர்கள், ஞானிகள், குருநாதர்கள், மகான்கள், அவதார புருஷர்களை வைத்து அவர்களின் உலக நலன்கள் குறித்து எடுத்துரைக்கும்படி மரியாதை செய்வதாக நினைக்க வேண்டும். 8-வது படியில் தெய்வ அவதாரங்கள், தசாவதாரம், கிருஷ்ண பரமாத்மாவின் அவதார வடிவங்கள், நவசக்திகள், அம்பாளின் வித்தியாசமான வடிவங்கள், கிராம தேவதைகள் அய்யனார், காளி மற்றும் துர்க்கை பொம்மைகளை வைக்கலாம்.
(7 / 9)

9-வது படியில் கலசத்தை நடிவில் வைத்து பூரண வடிவாய் சக்தி எழுந்தருளியுள்ளதாக நினைத்து சக்தியின் அவதாரங்களான பொம்மைகளை ஐந்துக்கு மேல் வைக்காமல் அழகுபடுத்த வேண்டும்.
(8 / 9)

மனிதன் என்பவன் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் இறைவனிடத்தில் சேர வேண்டும் என்கின்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த கொலு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை