தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவோடு மேஷத்தில் இணைந்த சுக்கிரன்.. உருவானது ராஜயோகம்.. பண மழையில் நனையும் ராசிகள்

குருவோடு மேஷத்தில் இணைந்த சுக்கிரன்.. உருவானது ராஜயோகம்.. பண மழையில் நனையும் ராசிகள்

Mar 16, 2024, 04:18 PM IST

Transit of Venus: குருவும் சுக்கிரனும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

  • Transit of Venus: குருவும் சுக்கிரனும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குரு பகவான் ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 
(1 / 6)

குரு பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் காதல், ஆடம்பரம், செல்வம், சொகுசு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் இடம் மாறக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர். 
(2 / 6)

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் குரு பகவானும் சுக்கிர பகவானும் ஒன்று சேர்க்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 
(3 / 6)

துலாம் ராசி: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நேர்மறையான மாற்றங்கள் உருவாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆடம்பர வாழ்க்கை உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 
(4 / 6)

கடக ராசி: குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.
(5 / 6)

ரிஷப ராசி: குரு மற்றும் சுக்கிரன் உங்களுக்கு சிறப்பான பலன்களை சேர்ந்து கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பணம் சேமிப்பதில் தற்போது முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை