Rahu Transit: ராகு பகவான் மோசமான பலன்களை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
Rahu Transit: ராகு பகவான் மோசமான பலன்களை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கிய வருகின்றார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 6)
கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்கின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
(3 / 6)
வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் கும்ப ராசிக்கு தனது இடத்தை மாற்றுகிறார். இது சில ராசிகளுக்கு நன்மைகளாக இருந்தாலும் சில ராசிகள் சிரமமான சூழ்நிலையை அனுபவிக்க போகின்றனர். அந்த வகையில் ராகு பகவானால் சிரமப்பட போகும் காட்சிகளை இங்கே காண்போம்
(4 / 6)
கன்னி ராசி: இந்த ஆண்டு ராகு பகவான் தாக்கத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவர் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
(5 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசியில் ராகு பகவான் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வீடு மற்றும் வசதிகளில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். ராகு பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். அதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
(6 / 6)
கும்ப ராசி: இந்த ஆண்டு உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ராகு பகவான் கொடுப்பார். செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.