தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குமட்டல் முதல் சரும பிரச்னை வரை..அளவுக்கு அதிகமாக இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

குமட்டல் முதல் சரும பிரச்னை வரை..அளவுக்கு அதிகமாக இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

Nov 26, 2024, 08:38 PM IST

Side Effects Ginger: குளிர்காலமோ அல்லது கோடைகாலமோ, இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவெல்லாம் என்பதை பார்க்கலாம்

Side Effects Ginger: குளிர்காலமோ அல்லது கோடைகாலமோ, இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவெல்லாம் என்பதை பார்க்கலாம்
உணவுகளில் பல வழிகளில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. உணவுகளின் சுவையை அதிகரிப்பது முதல் தேநீர் சுவையை மெருகேற்றுவது வரை இஞ்சிக்கு தனி சிறப்பு கொண்டதாக உள்ளது. இஞ்சி வெப்ப குணம் கொண்டதாக உள்ளது. இதன் காரணமாக மழை, குளிர்காலங்களில் இஞ்சியை பலரும் பல்வேறு உணவு வகைகளில் சேர்ப்பதுண்டு. ஆனால் அதிகமாக இஞ்சி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு பயனளிக்காது, அதே சமயம் உடலுக்கு சில தீங்குகளையும் விளைவிக்கும் 
(1 / 6)
உணவுகளில் பல வழிகளில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. உணவுகளின் சுவையை அதிகரிப்பது முதல் தேநீர் சுவையை மெருகேற்றுவது வரை இஞ்சிக்கு தனி சிறப்பு கொண்டதாக உள்ளது. இஞ்சி வெப்ப குணம் கொண்டதாக உள்ளது. இதன் காரணமாக மழை, குளிர்காலங்களில் இஞ்சியை பலரும் பல்வேறு உணவு வகைகளில் சேர்ப்பதுண்டு. ஆனால் அதிகமாக இஞ்சி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு பயனளிக்காது, அதே சமயம் உடலுக்கு சில தீங்குகளையும் விளைவிக்கும் (shutterstock)
இஞ்சியில் இருக்கும் சூடான தன்மை அதிகமாக உட்கொள்ளும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்
(2 / 6)
இஞ்சியில் இருக்கும் சூடான தன்மை அதிகமாக உட்கொள்ளும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்(shutterstock)
இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சரும பிரச்னைகளை அதிகரிக்கும். இஞ்சி எண்ணெயில் சில ரசாயனங்கள் உள்ளன. அவை சிலருக்கு சருமத்துக்கு எரிச்சலூட்டும். கண்களில் சிவப்பு ஆக்குதல், சுவாசிப்பதில் சிரமம், அரிப்பு, உதடுகள் வீக்கம், கண்களில் அரிப்பு மற்றும் தொண்டை பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்
(3 / 6)
இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சரும பிரச்னைகளை அதிகரிக்கும். இஞ்சி எண்ணெயில் சில ரசாயனங்கள் உள்ளன. அவை சிலருக்கு சருமத்துக்கு எரிச்சலூட்டும். கண்களில் சிவப்பு ஆக்குதல், சுவாசிப்பதில் சிரமம், அரிப்பு, உதடுகள் வீக்கம், கண்களில் அரிப்பு மற்றும் தொண்டை பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்(shutterstock)
அளவுக்கு அதிகமாக இஞ்சி உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால், இஞ்சி அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால், இஞ்சி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிகவும் குறையும். இது ஹைப்போக்ளைசிமியா என்று அழைக்கப்படுகிறது
(4 / 6)
அளவுக்கு அதிகமாக இஞ்சி உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால், இஞ்சி அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால், இஞ்சி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிகவும் குறையும். இது ஹைப்போக்ளைசிமியா என்று அழைக்கப்படுகிறது(shutterstock)
இஞ்சியின் சூடான தன்மை உடல் சூட்டை அதிகரிக்கும். இதன் காரணமாக, வியர்வை வெளியேறுவதுடன், உடலில் நீர் இழப்பு ஏற்படும்
(5 / 6)
இஞ்சியின் சூடான தன்மை உடல் சூட்டை அதிகரிக்கும். இதன் காரணமாக, வியர்வை வெளியேறுவதுடன், உடலில் நீர் இழப்பு ஏற்படும்(shutterstock)
இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சில நேரங்களில் ஒவ்வாமை பிரச்னையை அதிகரிக்கும். இதன் காரணமாக தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் தொண்டை ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படலாம்
(6 / 6)
இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சில நேரங்களில் ஒவ்வாமை பிரச்னையை அதிகரிக்கும். இதன் காரணமாக தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் தொண்டை ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படலாம்(shutterstock)
:

    பகிர்வு கட்டுரை