தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மூளை செயல்பாட்டை கூர்மையாக்க.. உடல் நலத்துடன் மனநலனையும் பேனி பாதுகாக்க.. காலையில் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்

மூளை செயல்பாட்டை கூர்மையாக்க.. உடல் நலத்துடன் மனநலனையும் பேனி பாதுகாக்க.. காலையில் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்

Dec 08, 2024, 07:48 PM IST

சில காலை பழக்கம் நாள் முழுவதும் குறிப்பிட தகுந்த தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே காலையில் நம் அன்றாட வழக்கத்தில் சில பழக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் உடலை மட்டுமின்றி மனநலத்தையும் பேனி பாதுகாக்கலாம்

  • சில காலை பழக்கம் நாள் முழுவதும் குறிப்பிட தகுந்த தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே காலையில் நம் அன்றாட வழக்கத்தில் சில பழக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் உடலை மட்டுமின்றி மனநலத்தையும் பேனி பாதுகாக்கலாம்
குழந்தைகள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் சரி, உடல்நலமும், மனநலமும் ஆரோக்கியமாக இருந்தால், அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிதாக இருக்கும். உங்கள் அன்றாட வழக்கத்தில், குறிப்பாக காலையில் சில பழக்கங்களைச் சேர்ப்பது மிகவும் முக்கியம். இந்த பழக்கங்கள் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், செறிவு அளவை அதிகரிக்கவும் உதவுகின்றன
(1 / 8)
குழந்தைகள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் சரி, உடல்நலமும், மனநலமும் ஆரோக்கியமாக இருந்தால், அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிதாக இருக்கும். உங்கள் அன்றாட வழக்கத்தில், குறிப்பாக காலையில் சில பழக்கங்களைச் சேர்ப்பது மிகவும் முக்கியம். இந்த பழக்கங்கள் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், செறிவு அளவை அதிகரிக்கவும் உதவுகின்றன
உடல் ஆரோக்கியத்துடன் மனநல ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் உழைப்பை விட மன ரீதியான செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் மூளையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
(2 / 8)
உடல் ஆரோக்கியத்துடன் மனநல ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் உழைப்பை விட மன ரீதியான செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் மூளையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
உடற்பயிற்சியுடன் நாளை தொடங்குங்கள்: காலையில் எழுந்தவுடனே உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்கினால், உடலுடன், மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் யோகா, பிராணாயாமம், ஜாகிங் அல்லது லைட் வாக்கிங் செய்யலாம். உங்கள் காலை வழக்கத்தில் சில வகையான உடல் செயல்பாடுகளைச் சேர்க்க மறக்காதீர்கள்
(3 / 8)
உடற்பயிற்சியுடன் நாளை தொடங்குங்கள்: காலையில் எழுந்தவுடனே உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்கினால், உடலுடன், மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் யோகா, பிராணாயாமம், ஜாகிங் அல்லது லைட் வாக்கிங் செய்யலாம். உங்கள் காலை வழக்கத்தில் சில வகையான உடல் செயல்பாடுகளைச் சேர்க்க மறக்காதீர்கள்(Shutterstock)
தியானத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்குங்கள்: இந்த பிஸியான வாழ்க்கையில், நாம் நிறகாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனதுக்கு சற்று ஓய்வு தேவை. இதற்கு, தியானத்தை விட சிறந்தது எதுவுமில்லை. எனவே காலையில் சிறிது தியானத்துக்கான நேரம் ஒதுக்குங்கள். உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். தியானம் செய்வது உங்கள் மனதை அமைதிப்படுத்தி, உறுதிப்படுத்தி, செறிவை அதிகரிக்கும்
(4 / 8)
தியானத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்குங்கள்: இந்த பிஸியான வாழ்க்கையில், நாம் நிறகாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனதுக்கு சற்று ஓய்வு தேவை. இதற்கு, தியானத்தை விட சிறந்தது எதுவுமில்லை. எனவே காலையில் சிறிது தியானத்துக்கான நேரம் ஒதுக்குங்கள். உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். தியானம் செய்வது உங்கள் மனதை அமைதிப்படுத்தி, உறுதிப்படுத்தி, செறிவை அதிகரிக்கும்(Shutterstock)
சத்தான காலை உணவோடு நாளைத் தொடங்குங்கள்: உணவு நமது உடல் மட்டமல்ல, மன நல ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக காலை உணவு என்பது ஒரு நாளின் மிகவும் சிறப்பு வாய்ந்த உணவாக உள்ளது. இதுசத்தானதாக இருக்க வேண்டும். எனவே காலையில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடாமல் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவுகளை சாப்பிடுங்கள். இவை அனைத்தும் உங்கள் மூளையை கூர்மைப்படுத்தவும், உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
(5 / 8)
சத்தான காலை உணவோடு நாளைத் தொடங்குங்கள்: உணவு நமது உடல் மட்டமல்ல, மன நல ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக காலை உணவு என்பது ஒரு நாளின் மிகவும் சிறப்பு வாய்ந்த உணவாக உள்ளது. இதுசத்தானதாக இருக்க வேண்டும். எனவே காலையில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடாமல் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவுகளை சாப்பிடுங்கள். இவை அனைத்தும் உங்கள் மூளையை கூர்மைப்படுத்தவும், உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்(Shutterstock)
மனநல பயிற்சியை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்குங்கள்: உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வது போல், உங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க சில மனநல பயிற்சிகளை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு, நீங்கள் எந்த புதிரையும் தீர்க்கலாம், குறுக்கெழுத்து அல்லது சுடோகுவை தீர்க்கலாம். செஸ் போன்ற மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை விளையாடலாம். இவை உங்கள் மூளையை மேலும் கூர்மையாகவும், வேடிக்கையாகவும் மாற்றும்
(6 / 8)
மனநல பயிற்சியை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்குங்கள்: உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வது போல், உங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க சில மனநல பயிற்சிகளை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு, நீங்கள் எந்த புதிரையும் தீர்க்கலாம், குறுக்கெழுத்து அல்லது சுடோகுவை தீர்க்கலாம். செஸ் போன்ற மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை விளையாடலாம். இவை உங்கள் மூளையை மேலும் கூர்மையாகவும், வேடிக்கையாகவும் மாற்றும்(Shutterstock)
மாணவர்கள் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்: காலையில் படிப்பது மிகவும் நல்லது என்று நம் பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள். காலையில் நாம் படிக்கும் விஷயங்கள் நீண்ட நாட்களாக மனதில் பதிந்திருக்கும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் படிப்புக்காக தினமும் காலையில் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதைச் செய்வதன் மூலம், படிப்பில் அதிக ஆர்வம் ஏற்படுவதுடன், நினைவாற்றலும் கூர்மையாக இருக்கும்
(7 / 8)
மாணவர்கள் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்: காலையில் படிப்பது மிகவும் நல்லது என்று நம் பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள். காலையில் நாம் படிக்கும் விஷயங்கள் நீண்ட நாட்களாக மனதில் பதிந்திருக்கும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் படிப்புக்காக தினமும் காலையில் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதைச் செய்வதன் மூலம், படிப்பில் அதிக ஆர்வம் ஏற்படுவதுடன், நினைவாற்றலும் கூர்மையாக இருக்கும்(Shutterstock)
காலையில் சூரிய ஒளியை பெறுங்கள்: தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் லேசான சூரிய ஒளியில் உட்காரவும். இது உங்கள் உடலுக்கு வைட்டமின் டி வழங்குவது மட்டுமல்லாமல், உங்கள் மனநிலையையும் மேம்படுத்தும். விரக்தியின் உணர்வில் இருப்பவர்களுக்கு படிப்படியாக நம்பிக்கை பிறக்கும். தினமும் பத்து நிமிடம் வெயிலில் அமர்ந்து வந்தால், மூளையில் டோபமைன் ஹார்மோனின் அளவு சரியாகி, மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்
(8 / 8)
காலையில் சூரிய ஒளியை பெறுங்கள்: தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் லேசான சூரிய ஒளியில் உட்காரவும். இது உங்கள் உடலுக்கு வைட்டமின் டி வழங்குவது மட்டுமல்லாமல், உங்கள் மனநிலையையும் மேம்படுத்தும். விரக்தியின் உணர்வில் இருப்பவர்களுக்கு படிப்படியாக நம்பிக்கை பிறக்கும். தினமும் பத்து நிமிடம் வெயிலில் அமர்ந்து வந்தால், மூளையில் டோபமைன் ஹார்மோனின் அளவு சரியாகி, மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்(Shutterstock)
:

    பகிர்வு கட்டுரை