தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Curry Leaves Juice: எடை இழப்பு, கண்கள் ஆரோக்கியம்..! வெறும் வயிற்றில் கறிவேப்பில் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Curry Leaves Juice: எடை இழப்பு, கண்கள் ஆரோக்கியம்..! வெறும் வயிற்றில் கறிவேப்பில் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Jul 25, 2024, 01:45 PM IST

Health Benefits Of Curry Leaves Juice: மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படும் கறிவேப்பிலை, உடல் எடை குறைப்புக்கு உதவுவதோடு, ரத்த சோகையை போக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதில் இருந்து முடி வளர்ச்சி வரை பல நன்மைகளைக் கொண்ட கறிவேப்பிலையை ஜூஸாக குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

கறிவேப்பிலையை சுத்தமாக கழுவி வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இவை உணவுகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சிறந்த நச்சு நீக்கியாகவும் உள்ளது. இதை ஜூஸாக பருகுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்
(1 / 7)
கறிவேப்பிலையை சுத்தமாக கழுவி வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இவை உணவுகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சிறந்த நச்சு நீக்கியாகவும் உள்ளது. இதை ஜூஸாக பருகுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்(shutterstock)
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, சி, ஈ போலிக் அமிலம், பீட்டா கெரட்டின், தாமிரம், பொட்டாசியம் புரதங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளன
(2 / 7)
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, சி, ஈ போலிக் அமிலம், பீட்டா கெரட்டின், தாமிரம், பொட்டாசியம் புரதங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளன(shutterstock)
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை இன்சுலின் உணர்திறனை திறம்பட நிர்வகிக்க உதவுவதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது
(3 / 7)
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை இன்சுலின் உணர்திறனை திறம்பட நிர்வகிக்க உதவுவதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது(shutterstock)
கறிவேப்பிலையில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பயோஆக்டிவ் கலவைகள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்ற விகிதத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் உடலில் கொழுப்பு சேராது. 
(4 / 7)
கறிவேப்பிலையில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பயோஆக்டிவ் கலவைகள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்ற விகிதத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் உடலில் கொழுப்பு சேராது. (shutterstock)
கறிவேப்பிலையில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் ஏ கண்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மகுலர் சிதைவு, இரட்டை பார்வை, கண்புரை பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது
(5 / 7)
கறிவேப்பிலையில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் ஏ கண்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மகுலர் சிதைவு, இரட்டை பார்வை, கண்புரை பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது(shutterstock)
10 முதல் 20 கறிவேப்பிலையை ஒரு கப் நீரில் நன்கு வேக வைத்து பின்னர் ஆற வைக்கவும். பின்னர் அந்த நீரில் இருக்கும் கறிவேப்பிலைகளை வடிகட்டி, கொஞ்சம் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர உடல் எடை குறையும்.
(6 / 7)
10 முதல் 20 கறிவேப்பிலையை ஒரு கப் நீரில் நன்கு வேக வைத்து பின்னர் ஆற வைக்கவும். பின்னர் அந்த நீரில் இருக்கும் கறிவேப்பிலைகளை வடிகட்டி, கொஞ்சம் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர உடல் எடை குறையும்.(shutterstock)
கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, தேங்காய் துருவல் - 4 ஸ்பூன், நெல்லிக்காய் - 1, உப்பு - கால் ஸ்பூன், மிளகு - 4, சீரகம் - கால் ஸ்பூன், எலுமிச்சை பழம் - பாதியளவு எடுத்து மிக்ஸி ஜாரிவ் அனைத்தையும் சேர்த்து அரைகப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். அறைத்தவுடன் இது மிகவும் கெட்டியாக இருக்கும். இதனுடன் தண்ணீர் ஒரு கப் அளவு கலந்து வடிகட்டி பருகலாம்
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை