தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Health Tips: இந்த காய்கறிகளை தப்பிதவறியும் பச்சையாக சாப்பிடாதீர்கள்..விளைவு மோசம்தான்

Health Tips: இந்த காய்கறிகளை தப்பிதவறியும் பச்சையாக சாப்பிடாதீர்கள்..விளைவு மோசம்தான்

Oct 04, 2024, 08:30 AM IST

Raw Vegetables: சில காய்கறிகளில் இயற்கை நச்சுகள் மற்றும் ஜீரணிக்க கடினமான சர்க்கரைகள் உள்ளன, அவை ஒரு நபருக்கு இரைப்பை நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அந்த வகையில் எந்தெந்த காய்கறிகளை தப்பித்தவறியும் பச்சையாக சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்

  • Raw Vegetables: சில காய்கறிகளில் இயற்கை நச்சுகள் மற்றும் ஜீரணிக்க கடினமான சர்க்கரைகள் உள்ளன, அவை ஒரு நபருக்கு இரைப்பை நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அந்த வகையில் எந்தெந்த காய்கறிகளை தப்பித்தவறியும் பச்சையாக சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்
நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை சம அளவில் உங்களது உணவு டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். பழங்களை அப்படியே பச்சையாக சாப்பிடுவது போல் காய்கறிகளை சாப்பிட முடியாது. சமைத்து சாப்பிட்டால் தான் காய்கறியில் உள்ள அனைத்து நன்மைகளையும், ஊட்டச்சத்துகளையும் பெறலாம். சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடலாம் என்றாலும் தப்பி தவறியும் நேரடியாக, சமைக்காமல் சாப்பிடக்கூடிய காய்கறிகள் எவை என்பதை பார்க்கலாம்
(1 / 7)
நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை சம அளவில் உங்களது உணவு டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். பழங்களை அப்படியே பச்சையாக சாப்பிடுவது போல் காய்கறிகளை சாப்பிட முடியாது. சமைத்து சாப்பிட்டால் தான் காய்கறியில் உள்ள அனைத்து நன்மைகளையும், ஊட்டச்சத்துகளையும் பெறலாம். சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடலாம் என்றாலும் தப்பி தவறியும் நேரடியாக, சமைக்காமல் சாப்பிடக்கூடிய காய்கறிகள் எவை என்பதை பார்க்கலாம்(shutterstock)
சில காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள பூச்சிக்கொல்லிகள் மற்றும் அசுத்தங்களை க்ளீனர்கள் மூலம் கழுவுவதன் மூலம் அகற்றலாம். இருப்பினும் அவற்றை பச்சையாக சாப்பிடலாம் என்கிற அர்த்தமில்லை. இதற்கான சில பின்னணி காரணங்களும் இருக்கின்றன
(2 / 7)
சில காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள பூச்சிக்கொல்லிகள் மற்றும் அசுத்தங்களை க்ளீனர்கள் மூலம் கழுவுவதன் மூலம் அகற்றலாம். இருப்பினும் அவற்றை பச்சையாக சாப்பிடலாம் என்கிற அர்த்தமில்லை. இதற்கான சில பின்னணி காரணங்களும் இருக்கின்றன(shutterstock)
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு உள்ளது. ஆனால் பச்சை உருளைக்கிழங்கு உங்கள் சுவையை கெடுப்பது மட்டுமல்லாமல், செரிமான பிரச்னைகளையும் உண்டாக்கும். இதில் இருக்கும் ஸ்டார்ச் வயிற்றில் வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், எந்த வகையான இரைப்பை பிரச்னையையும் தவிர்க்க, உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு முன் அதை வறுப்பது அல்லது சமைப்பது நல்லது
(3 / 7)
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு உள்ளது. ஆனால் பச்சை உருளைக்கிழங்கு உங்கள் சுவையை கெடுப்பது மட்டுமல்லாமல், செரிமான பிரச்னைகளையும் உண்டாக்கும். இதில் இருக்கும் ஸ்டார்ச் வயிற்றில் வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், எந்த வகையான இரைப்பை பிரச்னையையும் தவிர்க்க, உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு முன் அதை வறுப்பது அல்லது சமைப்பது நல்லது(shutterstock)
முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளான காலிஃபிளவர், ப்ரோக்கோலி மற்றும் முளைகள் போன்றவற்றையும் பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த காய்கறிகளில் உள்ள சர்க்கரை உள்ளடக்கம் ஜீரணிக்க கடினமானதாக இருக்கும். இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் பல இரைப்பை பிரச்னைகள் ஏற்படும். நீங்கள் ஏற்கனவே தைராய்டு நோயாளியாக இருந்தால், இந்த காய்கறிகளை உட்கொள்வது உங்கள் பிரச்னைகளை அதிகரிக்கும்
(4 / 7)
முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளான காலிஃபிளவர், ப்ரோக்கோலி மற்றும் முளைகள் போன்றவற்றையும் பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த காய்கறிகளில் உள்ள சர்க்கரை உள்ளடக்கம் ஜீரணிக்க கடினமானதாக இருக்கும். இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் பல இரைப்பை பிரச்னைகள் ஏற்படும். நீங்கள் ஏற்கனவே தைராய்டு நோயாளியாக இருந்தால், இந்த காய்கறிகளை உட்கொள்வது உங்கள் பிரச்னைகளை அதிகரிக்கும்(shutterstock)
கத்தரிக்காயில் கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் சோலனைன் என்ற கலவை உள்ளது. உடலில் சோலனைன் நச்சுக்கள் குமட்டல், தலைச்சுற்றல், வாந்தி மற்றும் பிடிப்புகள் உட்பட பல நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். கத்தரிக்காய் சாப்பிடுவதற்கு முன் பாதுகாப்பாக சமைக்க வேண்டும். கத்தரிக்காய் குழம்பு செய்வதற்கு முன், அதை ஒரு நல்ல கிளீனரின் உதவியுடன் சுத்தம் செய்யுங்கள்
(5 / 7)
கத்தரிக்காயில் கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் சோலனைன் என்ற கலவை உள்ளது. உடலில் சோலனைன் நச்சுக்கள் குமட்டல், தலைச்சுற்றல், வாந்தி மற்றும் பிடிப்புகள் உட்பட பல நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். கத்தரிக்காய் சாப்பிடுவதற்கு முன் பாதுகாப்பாக சமைக்க வேண்டும். கத்தரிக்காய் குழம்பு செய்வதற்கு முன், அதை ஒரு நல்ல கிளீனரின் உதவியுடன் சுத்தம் செய்யுங்கள்(shutterstock)
பச்சையான அல்லது வேகவைக்கப்படாத பீன்ஸில் அதிக அளவு டாக்ஸின், கிளைகோபுரோட்டீன் லெக்டின் உள்ளது. இதனை உட்கொண்ட சில மணி நேரங்களிலேயே ஒருவருக்கு குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படும். பீன்ஸை சமைப்பதற்கு முன் 5 மணி நேரம் ஊறவைப்பது அதன் நச்சுக்களை அழிக்க உதவும்
(6 / 7)
பச்சையான அல்லது வேகவைக்கப்படாத பீன்ஸில் அதிக அளவு டாக்ஸின், கிளைகோபுரோட்டீன் லெக்டின் உள்ளது. இதனை உட்கொண்ட சில மணி நேரங்களிலேயே ஒருவருக்கு குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படும். பீன்ஸை சமைப்பதற்கு முன் 5 மணி நேரம் ஊறவைப்பது அதன் நச்சுக்களை அழிக்க உதவும்(shutterstock)
பலர் காளான்களை பச்சையாகவும் சாப்பிடுகிறார்கள். ஆனால் அதில் உள்ள சத்துக்கள் சரியாக கிடைக்க வேண்டுமானால், சமைத்த பின் சாப்பிடுவது நல்லது. காளன்களை வறுத்து உட்கொள்ளலாம். அத்தகைய காளான்கள் பச்சையான காளான்களை விட அதிக பொட்டாசியம் கொண்டிருக்கின்றன. காளான்களை சாப்பிடுவதற்கு முன், அவற்றை ஒரு கிளீனர் மூலம் நன்கு கழுவவும்
(7 / 7)
பலர் காளான்களை பச்சையாகவும் சாப்பிடுகிறார்கள். ஆனால் அதில் உள்ள சத்துக்கள் சரியாக கிடைக்க வேண்டுமானால், சமைத்த பின் சாப்பிடுவது நல்லது. காளன்களை வறுத்து உட்கொள்ளலாம். அத்தகைய காளான்கள் பச்சையான காளான்களை விட அதிக பொட்டாசியம் கொண்டிருக்கின்றன. காளான்களை சாப்பிடுவதற்கு முன், அவற்றை ஒரு கிளீனர் மூலம் நன்கு கழுவவும்(shutterstock)
:

    பகிர்வு கட்டுரை