promotionBanner
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்த தப்பை மட்டும் பண்ணாதிங்க..உங்கள் தலைமுடியை யாராலும் காப்பாத முடியாது! தலை முடி உதிர்வுக்கான காரணங்கள்

இந்த தப்பை மட்டும் பண்ணாதிங்க..உங்கள் தலைமுடியை யாராலும் காப்பாத முடியாது! தலை முடி உதிர்வுக்கான காரணங்கள்

Nov 29, 2024, 08:48 PM IST

Winter Hair Fall Reasons: குளிர்காலம் தொடங்கி இருக்கும் நிலையில், இந்த நேரத்தில் தலைமுடி உதிர்வு என்பது பலருக்கும் பொதுவான பிரச்னையாக இருந்து வருகிறது

Winter Hair Fall Reasons: குளிர்காலம் தொடங்கி இருக்கும் நிலையில், இந்த நேரத்தில் தலைமுடி உதிர்வு என்பது பலருக்கும் பொதுவான பிரச்னையாக இருந்து வருகிறது
மழை பொலிவு, பனி அதிகமாக இருந்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானதாக தலைமுடி உதிர்வு இருந்து வருகிறது. தலைமுடியில் ஏற்படும் வறட்சி காரணமாக உதிர்வு ஏற்படுகிறது. அத்துடன் ஈரப்பதம் காரணமாக சிலருக்கு பொடுகு பாதிப்பும் இருக்கலாம்
(1 / 6)
மழை பொலிவு, பனி அதிகமாக இருந்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானதாக தலைமுடி உதிர்வு இருந்து வருகிறது. தலைமுடியில் ஏற்படும் வறட்சி காரணமாக உதிர்வு ஏற்படுகிறது. அத்துடன் ஈரப்பதம் காரணமாக சிலருக்கு பொடுகு பாதிப்பும் இருக்கலாம்(pixabay)
குளிர் காலத்தில் பனி அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் வெந்நீரில் குளிப்பதுண்டு. தலைக்கும் வெந்நீரை ஊற்றும்போது தலைமுடியானது வறட்சி அடைகிறது. வெந்நீர் முடியில் இருக்கும் எண்ணெய் சத்துகளை முழுவதுமாக உறிஞ்சிவிடும். இதனால் முடியின் பொலிவு குறைந்து உதிர்கிறது 
(2 / 6)
குளிர் காலத்தில் பனி அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் வெந்நீரில் குளிப்பதுண்டு. தலைக்கும் வெந்நீரை ஊற்றும்போது தலைமுடியானது வறட்சி அடைகிறது. வெந்நீர் முடியில் இருக்கும் எண்ணெய் சத்துகளை முழுவதுமாக உறிஞ்சிவிடும். இதனால் முடியின் பொலிவு குறைந்து உதிர்கிறது (pixabay)
அதேபோல் குளிர்காலத்தில், குளித்த பிறகு தலைமுடி உலர நீண்ட நேரம் ஆகும். பிஸியான வாழ்க்கை முறையில் தலைமுடியை உலர்த்த போதிய நேரம் கிடைக்காமல் பலரும் ஹேர் ட்ரையர்களை பயன்படுத்துவதுண்டு
(3 / 6)
அதேபோல் குளிர்காலத்தில், குளித்த பிறகு தலைமுடி உலர நீண்ட நேரம் ஆகும். பிஸியான வாழ்க்கை முறையில் தலைமுடியை உலர்த்த போதிய நேரம் கிடைக்காமல் பலரும் ஹேர் ட்ரையர்களை பயன்படுத்துவதுண்டு(pixabay)
ஹேர் ட்ரையரைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலும் தலைமுடி வறண்டு, முடி உதிர்தல் பிரச்சனையை அதிகரிக்கிறது. ஹேர் ட்ரையரால் உச்சந்தலையும் வறட்சி அடைந்து, பொடுகு பிரச்னையை அதிகரிக்கும்
(4 / 6)
ஹேர் ட்ரையரைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலும் தலைமுடி வறண்டு, முடி உதிர்தல் பிரச்சனையை அதிகரிக்கிறது. ஹேர் ட்ரையரால் உச்சந்தலையும் வறட்சி அடைந்து, பொடுகு பிரச்னையை அதிகரிக்கும்(pixabay)
தலைமுடியை ஈரமாகவே வைத்திருந்தால் சளி தொல்லையை ஏற்படுத்தும். அத்துடன் முடியில் இருக்கும் ஈரப்பதம் பொடுகளை உருவாக்கி தலைமுடி உதிர்வுக்கு வழிவகுக்கும். பாக்டீரியா, ஈஸ்ட் அல்லது பூஞ்சைகள் தலைமுடி கால்களில் ஆக்கரமித்து தொற்றுகளை ஏற்படுத்தும்
(5 / 6)
தலைமுடியை ஈரமாகவே வைத்திருந்தால் சளி தொல்லையை ஏற்படுத்தும். அத்துடன் முடியில் இருக்கும் ஈரப்பதம் பொடுகளை உருவாக்கி தலைமுடி உதிர்வுக்கு வழிவகுக்கும். பாக்டீரியா, ஈஸ்ட் அல்லது பூஞ்சைகள் தலைமுடி கால்களில் ஆக்கரமித்து தொற்றுகளை ஏற்படுத்தும்(pixabay)
தலைமுடியை பராமரிக்கிறேன் என நினைத்து அதிகமாக கெமிக்கல் மற்றும் அவை சார்ந்த பொருள்கள் பயன்படுத்துவது, தலைமுடிக்கு என தனியாக சிகிச்சை அளிப்பது போன்ற பிரச்னைகளாலும் முடி உதிர்வு பாதிப்பு ஏற்படலாம் 
(6 / 6)
தலைமுடியை பராமரிக்கிறேன் என நினைத்து அதிகமாக கெமிக்கல் மற்றும் அவை சார்ந்த பொருள்கள் பயன்படுத்துவது, தலைமுடிக்கு என தனியாக சிகிச்சை அளிப்பது போன்ற பிரச்னைகளாலும் முடி உதிர்வு பாதிப்பு ஏற்படலாம் 
:

    பகிர்வு கட்டுரை