(6 / 6)‘’ஒரு அவதாரத்தில் ஐயன் பூர்ணை மற்றும் புஷ்கலா தேவியை திருமணம் செய்துகொண்டதாக வரலாறு உண்டு. ஏன், அந்த வரலாறிலேயே அவர்களுக்கு குழந்தை இருந்ததாக சொல்லப்படுவதுண்டு.ஐயப்பன் அச்சன்கோயிலில் ஒரு உருவமாகவும், ஆரியங்காவில் இளைஞராகவும், குளத்துப்புழையில் ஐயப்பன் குழந்தையாகவும், பந்தளத்தில் பார்த்தால் ஐயப்பன் பன்னிரெண்டு வயது சிறுவனாகவும் இருக்கிறான். ஆனால், சபரிமலையில் இந்த கலியுகத்தில் தர்மசாஸ்தாவாக இருக்கிறார்.சபரிமலை கதைப்படி பார்த்தால், என்றைக்கு தன்னைப் பார்க்க கன்னிசாமிகள் வராமல் இருக்கிறார்களோ, அந்த வருடம் நீலாவதியை மணமுடித்துக்கொள்வதாக ஒரு கதை இருக்கிறது. அதனால், கன்னி சாமிமார்களுக்கு ஐயப்பனின் முக்கியத்துவம் மிக அதிகம்.எனவே, கன்னிமார்கள் அன்னதானம் கொடுக்கவில்லை என்றால் பாவம். சரியான தரிசனம் கிடைக்காது. சபரிமலை பயணத்தில் ஆபத்து வரும் என்று யாராவது சொன்னால், தயவு செய்து, அதைக் காதில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பக்தி தான் முக்கியம். கன்னி சாமிமார்களுக்கு ஐயப்பன் துணை இருப்பார்’’ எனப் பேசி முடித்தார், குருசாமி பாடகர் வீரமணி ராஜூ.நன்றி: குருசாமி பாடகர் வீரமணி ராஜூ அவர்கள் மற்றும் நியூஸ் டி.என். யூட்யூப் சேனல்