தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்த ஆண்டில் ரீ-ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் கில்லி அடித்த படங்கள்.. எவ்வளவு வசூல் தெரியுமா?

இந்த ஆண்டில் ரீ-ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் கில்லி அடித்த படங்கள்.. எவ்வளவு வசூல் தெரியுமா?

Dec 21, 2024, 01:04 PM IST

2024ஆம் ஆண்டில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என டாப் ஹீரோக்களின் பல சூப்பர் படங்கள் ரீ-ரிலீஸ் வசூல் வேட்டையும் நிகழ்த்தின. ரீ-ரிலீஸில் அதிக வசூலை குவித்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

  • 2024ஆம் ஆண்டில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என டாப் ஹீரோக்களின் பல சூப்பர் படங்கள் ரீ-ரிலீஸ் வசூல் வேட்டையும் நிகழ்த்தின. ரீ-ரிலீஸில் அதிக வசூலை குவித்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
பழைய சூப்பர் ஹிட் படங்களின் ரீ-ரிலீஸ் என்பது தற்போது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. டாப் ஹீரோக்களின் ஹிட் படங்கள் அவரது பிறந்தநாளில் அல்லது வேறு விசேஷ நாள்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுகிறது. இந்த படங்களை இந்த தலைமுறை ரசிகர்களும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து என்ஜாய் செய்து வருகிறார்கள்
(1 / 11)

ரீ-ரிலீஸில் அதிக வசூலை குவித்த படங்களில் 2018இல் வெளியாகி ஹிட்டடித்த டப்பாட் படம் உள்ளது. பெரிய ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் திகல் கதையம்சத்துடன் அமைந்திருக்கும் இந்த படம் நான்கு வாரத்தில் ரூ. 30.50 கோடி வசூலித்துள்ளது
(2 / 11)

தளபதி விஜய்யை கமர்ஷியல் ஹீரோவாக்கிய படம் கில்லி. 2004இல் வெளியான இந்த படம் 20வது ஆண்டை கொண்டாடும் விதமாக மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த முறையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வசூலிலும் கில்லி அடித்தது. படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 30 கோடி வசூலித்துள்ளது
(3 / 11)

டிரிப்டி டிம்ரி, அவினாஷ் திவாரி நடிப்பில் 2018இல் வெளியான ரொமான்டிக் ட்ராமா படமான லைலா மஜ்ழு இந்த ஆண்டில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த முறை படம் ஆறு வாரங்களில் ரூ. 10.50 கோடி சம்பாதித்துள்ளது
(4 / 11)

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோ மகேஷ்பாபுவின் சினிமா கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக இருந்த 2001இல் ரிலீசான முராரி, அவரது 49வது பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ரூ. 8 கோடியை வசூலித்துள்ளது 
(5 / 11)

2011இல் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான மியூசிக்கல் ரெமான்ஸ் படம் ராக்ஸ்டார். இந்த படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அப்போது சம்பாதித்தை விட மூன்று மடங்கு அதிகம் வசூலை ஈட்டியுள்ளது. படம் 5 வாரத்தில் ரூ. 7.50 கோடி வசூலித்துள்ளது
(6 / 11)

ஷாருக்கான் - ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் 2004இல் வெளியான ரொமாண்டிக் படமான வீர் ஜாரா, ரீ-ரிலீஸில் ரூ. 6.30 கோடியை வசூலித்துள்ளது
(7 / 11)

இந்தியில் சல்மான் கான் நடிப்பில் சூப்பர் ஹிட்டான தபாங் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி சூப்பர் ஹிட்டான படம் கப்பர் சிங். பவன் கல்யாண் நடித்திருந்த இந்த படம் அவரது பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 6.25 கோடி வசூலித்துள்ளது 
(8 / 11)

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், சயீப் அலிகான், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் நடித்து 2003இல் வெளியாகி ஹிட்டடித்த ரொமாண்டிக் படமான கல் ஹோ நா ஹோ படம் மீண்டும் இந்த ஆண்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் 10 நாளில் ரூ. 3.70 கோடி வசூலித்துள்ளது
(9 / 11)

2000ஆவது ஆண்டில் மலையாளத்தில் வெளியான மியூசிக்கல் ஹாரர் படம் தேவதூதன். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருக்கும் இந்த படம் ரீ-ரிலீஸில் ரூ. 3.25 கோடி வசூலித்துள்ளது
(10 / 11)

மாதவன் நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட்டான மின்னலே ஹிந்தி ரீமேக்கான ரெஹ்னா ஹை தேரே தில் மெய்ன் படம் இந்த ஆண்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தியிலும் மாதவன் தான் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படம் முதல் வார முடிவில் ரூ. 1.20 கோடி வசூலித்தது
(11 / 11)

:

    பகிர்வு கட்டுரை