(3 / 5)போக்கிரி படத்தின் ட்ரெயின் காட்சியை வடிவமைத்தது பற்றி பேசிய அவர், “ அந்தக்காட்சியை எடுப்பதற்காக நான் காலையிலேயே சென்று விட்டேன். ஏழு மணிக்கு முதல் காட்சி. அந்த ஃபைட்டுக்கு தேவையான எல்லா விஷயங்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, அங்கிருந்த கண்ணாடியை பார்த்து தலையை தடவினேன். குரு அண்ணன் காரி துப்பி விட்டார். நான் ஏன் என்று கேட்டேன் உடனே அவர் 40 ட்ரெயின் ஃபைட் எடுத்து விட்டாய். எல்லாவற்றிலும் இதைத்தானே செய்கிறாய் என்று சொன்னார் எனக்கு அது செருப்பால் அடித்தது போல இருந்தது. உடனே இயக்குநருக்கு போன் செய்து அந்த சண்டைக்காட்சியை அப்படியே மாலை 6 மணிக்கு மாற்றுங்கள் என்று சொல்லி விட்டு சென்றேன்.