தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Savukku Shankar: கைதான சவுக்கு சங்கர்.. வாகன விபத்தில் சிக்கியது எப்படி? தாராபுரத்தில் நடந்தது என்ன?

Savukku Shankar: கைதான சவுக்கு சங்கர்.. வாகன விபத்தில் சிக்கியது எப்படி? தாராபுரத்தில் நடந்தது என்ன?

May 04, 2024, 11:26 AM IST

Savukku Shankar: கோவை அழைத்து வரும் வழியில் தாராபுரத்தில் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வேன் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் கிடைத்தது. அதன் பின் கிடைத்த தகவல்களில் அது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சமூக வலைதளத்தில் பரபரப்பான பதிவுகள் இடம் பெறத் தொடங்கின.

  • Savukku Shankar: கோவை அழைத்து வரும் வழியில் தாராபுரத்தில் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வேன் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் கிடைத்தது. அதன் பின் கிடைத்த தகவல்களில் அது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சமூக வலைதளத்தில் பரபரப்பான பதிவுகள் இடம் பெறத் தொடங்கின.
சவுக்கு ஊடகத்தின் நிர்வாகியான பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. பெண் காவலர்களை தவறாக சித்தரித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 
(1 / 8)

கோவை மாநகர போலீஸ் சைபர் கிரைம் பிரிவால் கீழ்கண்ட பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 294(b), 509 மற்றும் 353 IPC r/w பிரிவு 4 தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
(2 / 8)

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு போட்டியாக தானும் செப்டம்பரில் அமைப்பு ஒன்றை தொடங்கவிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார் சவுக்கு சங்கர். அதுமட்டுமின்றி அமைச்சர் உதயநிதியை எதிர்த்து 2026ல் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார் சவுக்கு சங்கர்
(3 / 8)

இந்நிலையில் தான் சவுக்கு மீடியா தொடர்பான சிலர் கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்டனர். சவுக்கு மீடியா தலைமை எடிட்டர் முத்தலிப் தனது பொறுப்பபை திடீர் ராஜினாமா செய்தார். இதற்கிடையில் தான், கோவை போலீசார் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர். அங்கிருந்து வேன் மூலம் அவரை கோவை அழைத்து வந்தனர் 
(4 / 8)

கோவை அழைத்து வரும் வழியில் தாராபுரத்தில் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வேன் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் கிடைத்தது. அதன் பின் கிடைத்த தகவல்களில் அது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சமூக வலைதளத்தில் பரபரப்பான பதிவுகள் இடம் பெறத் தொடங்கின.
(5 / 8)

தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் கார் ஒன்றும், சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வேனும் விபத்தில் சிக்கின. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்ட போலீஸ் வேன் முன்புறம் சேதம் அடைந்தது. இந்த விபத்தால் அப்பகுதி கடும் நெருக்கடிக்கு ஆளானது. 
(6 / 8)

சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார் காயம் அடைந்த இரு தரப்பையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்தில் காரில் வந்தவர்களுக்கு தான் கடுமையான காயம் என்று கூறப்படுகிறது. சாலையில் நடுப்பகுதியில் உள்ள தடுப்பில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 
(7 / 8)

சவுக்கு சங்கர் உள்ளிட்ட இரு போலீசார் சிறு காயம் அடைந்த நிலையில், தாராபுரம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மாற்று வாகனத்தில் சவுக்கு சங்கர் அங்கிருந்து கோவைக்கு அனுப்பப்பட்டார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. மேலும் விபத்திற்கு உள்ளான இரு வாகனங்களும் தாராபுரம் போலீசார் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. 
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை