தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Check Fraud: ரூ.20 லட்சம் செக் மோசடி.. பிரபல நிதி நிறுவன இயக்குனருக்கு 6 மாதம் சிறை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Check Fraud: ரூ.20 லட்சம் செக் மோசடி.. பிரபல நிதி நிறுவன இயக்குனருக்கு 6 மாதம் சிறை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Jul 27, 2024, 11:42 PM IST

ரூ.20 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு செக் மோசடி செய்ததாக கூறப்படும் சென்னையைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனத்தின் இயக்குனரான பீட்டர் அறிவரசனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  • ரூ.20 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு செக் மோசடி செய்ததாக கூறப்படும் சென்னையைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனத்தின் இயக்குனரான பீட்டர் அறிவரசனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, பெருங்குடி அருகே கந்தன்சாவடி பகுதியில் UAR நிதி லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்களாக பீட்டர் அறிவரசன் மற்றும் பினு கிறிஸ்டினா ஆகியோர் உள்ளனர்.
(1 / 4)

அதில் பீட்டர் அறிவரசனிடம் சென்னை, விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் பல்வேறு வகைகளில் சுமார் ரூ. 20 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால், மீண்டும் பணத்தை தராமல் பீட்டர் அறிவரசன் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
(2 / 4)

இதனால் அதிர்ச்சியடைந்த முருகானந்தம், தொடர்ந்து பணத்தைக் கேட்டு வந்ததால் அறிவரசன் செக் ஒன்றை அளித்துள்ளார். அதை வங்கியில் செலுத்திய போது பணமின்றி செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார். 
(3 / 4)

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், பீட்டர் அறிவரசன் குற்றம் செய்தது உண்மை என தீர்ப்பளித்த நீதிபதி 6 மாத சிறை தண்டனை விதித்தும், இழப்பீடாக காசோலை தொகை ரூ.20 லட்சத்தை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.
(4 / 4)

:

    பகிர்வு கட்டுரை