தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kari Dhosai: மணக்குற மட்டன்.. திகட்டாத சுவை.. மதுரை கறிதோசை செய்முறை இதோ!

Kari Dhosai: மணக்குற மட்டன்.. திகட்டாத சுவை.. மதுரை கறிதோசை செய்முறை இதோ!

Jun 21, 2023, 06:15 AM IST

Madurai kari Dhosai: நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் மயக்கும் மதுரை கறி தோசையை சமைக்க முடியும் தெரியுமா? அதற்காக பெரிய மெனக்கெடல் வேண்டாம். எளிதில் விளக்குகிறோம். ப்ரீயா இருக்கும் போது சமைத்து, உங்கள் குடும்பத்தாரை அசத்துங்க. இதோ மதுரை கறிதோசை செய்யும் முறை..

  • Madurai kari Dhosai: நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் மயக்கும் மதுரை கறி தோசையை சமைக்க முடியும் தெரியுமா? அதற்காக பெரிய மெனக்கெடல் வேண்டாம். எளிதில் விளக்குகிறோம். ப்ரீயா இருக்கும் போது சமைத்து, உங்கள் குடும்பத்தாரை அசத்துங்க. இதோ மதுரை கறிதோசை செய்யும் முறை..
கறி தோசை செய்வதற்கு முதலில் கொத்துக் கறி செய்ய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும். 
(1 / 4)
கறி தோசை செய்வதற்கு முதலில் கொத்துக் கறி செய்ய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும். (kichaskitchenworld Instagram)
வெங்காயம் பொன்னிறமாக வந்த பின் இஞ்சி, பூண்டு மிக்ஸ் போட்டு உடன் வதக்க வேண்டும். பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் உப்பு, தலா ஒரு டீ ஸ்பூன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கால் டீ ஸ்பூன் மஞ்சள் தூள், கொஞ்சம் மிளகுப் பொடி போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். 
(2 / 4)
வெங்காயம் பொன்னிறமாக வந்த பின் இஞ்சி, பூண்டு மிக்ஸ் போட்டு உடன் வதக்க வேண்டும். பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் உப்பு, தலா ஒரு டீ ஸ்பூன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கால் டீ ஸ்பூன் மஞ்சள் தூள், கொஞ்சம் மிளகுப் பொடி போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். (kichaskitchenworld Instagram)
500 கிராம் கொத்துக்கறியை சேர்த்து மசாலாவுடன் மிக்ஸ் செய்ய வேண்டும். 5 நிமிடம் வதங்கியப் பின் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியில் கால் டீ ஸ்பூன் கரம் மசாலா தூவி, கொத்து மல்லியை சேர்த்து இறக்கிவிட வேண்டும். இப்போது கொத்துக்கறி ரெடி
(3 / 4)
500 கிராம் கொத்துக்கறியை சேர்த்து மசாலாவுடன் மிக்ஸ் செய்ய வேண்டும். 5 நிமிடம் வதங்கியப் பின் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியில் கால் டீ ஸ்பூன் கரம் மசாலா தூவி, கொத்து மல்லியை சேர்த்து இறக்கிவிட வேண்டும். இப்போது கொத்துக்கறி ரெடி(kichaskitchenworld Instagram)
அதன் பின் இரு முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி வைக்கவும். அதன் பின் தோசைக்கல்லியில் ஒரு கரண்டு மாவு அளவிற்கு தோசை ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றய பின், அடித்து வைத்த முட்டையை தேசை மீது ஊற்றவும். தடவிய பின் ஒரு கரண்டி கொத்துக்கறியை அதன் மீது வைத்து தோசை மீது பரப்பவும். இறுதியில் கொஞ்சம் கொத்து மல்லியை தூவி கரண்டியால் தடவிவிடவும். இப்போது சுடச்சுட மதுரை கறி தோதை ரெடி
(4 / 4)
அதன் பின் இரு முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி வைக்கவும். அதன் பின் தோசைக்கல்லியில் ஒரு கரண்டு மாவு அளவிற்கு தோசை ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றய பின், அடித்து வைத்த முட்டையை தேசை மீது ஊற்றவும். தடவிய பின் ஒரு கரண்டி கொத்துக்கறியை அதன் மீது வைத்து தோசை மீது பரப்பவும். இறுதியில் கொஞ்சம் கொத்து மல்லியை தூவி கரண்டியால் தடவிவிடவும். இப்போது சுடச்சுட மதுரை கறி தோதை ரெடி(kichaskitchenworld Instagram)
:

    பகிர்வு கட்டுரை