(4 / 6)‘’இந்தப் படத்தோட டிஸ்கசன் பாக்யராஜ் ஆபிஸில் தான் நடக்கும். உடனே, என்கிட்ட செந்தில் நானும் வரேன்னு சொல்லிடுவார். நான் பாக்யராஜ் சார்கிட்ட சொல்வேன். சரியாக ரஜினி சார் கார் 7 மணிக்கு வந்ததும் கீழே இறங்கி கேட்டுக்கு வந்திடுவார், பாக்யராஜ் சார். அந்த கோயம்புத்தூர் தமிழ்நாடு பண்பாடு அதில் தெரியும். ரஜினி சார் எதிர்க்கவே டிஸ்கசன் நடக்கும். அப்போது பார்த்திபன், லிவிங்ஸ்டன் எல்லோரும் எப்படி பேசுறாங்கன்னு பார்ப்பாங்க. அப்படியே 12 மணி ஆனவுடன் கிளம்புவார் ரஜினி சார். அடுத்து ரஜினி சார், வீட்டில் இருந்து இறங்கி வெளியில் போகும்போது பாக்யராஜ் சாரும் வாசல் வரை சென்று வழியனுப்பி வைப்பார். அந்த கார் தெருவில் திரும்பும்வரை அங்கேயே நின்று பார்ப்பார், பாக்யராஜ் சார். ஏன் சார் என்று கேட்டால், அது கோயம்புத்தூர் பண்பாடுன்னு சொல்லிடுவார்.''