தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kamal Hassan: நடிகர் கமல் மீது இயக்குனர் லிங்குசாமி புகார்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம் எடுக்கும் 'உத்தம வில்லன்'!

Kamal Hassan: நடிகர் கமல் மீது இயக்குனர் லிங்குசாமி புகார்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம் எடுக்கும் 'உத்தம வில்லன்'!

May 02, 2024, 09:23 PM IST

நடிகர் கமல்ஹாசன் மீது இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளது.

  • நடிகர் கமல்ஹாசன் மீது இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளது.
'உத்தம வில்லன்' படம் நஷ்டம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மீது லிங்குசாமி சகோதரர்களுக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது.
(1 / 6)

நடிகர் கமல்ஹாசன் ரூ.50 கோடியில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படத்தை தயாரித்துக் கொடுப்பதாக முதல் பிரதி அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு விருப்பமில்லாத கதையை கட்டாயப்படுத்தி 'உத்தம வில்லன்' என்ற பெயரில் கமல் எடுத்ததுடன், ஏதேனும் தவறு நடக்கும் பட்சத்தில் நஷ்டத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அப்போது கூறியுள்ளார்.
(2 / 6)

படத்தின் முதல் பிரதி போட்டு காண்பித்த போது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு படம் பிடிக்காமல் இருந்துள்ளது. மேலும், படம் பெரிய தோல்வியை தழுவியது. இதுகுறித்து பின்னர் பேசியபோது ரூ.30 கோடிக்கு ஒரு படம் பண்ணி தருவதாக கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
(3 / 6)

'உத்தம வில்லன்' படத்தின் நஷ்டத்திற்கு வேறு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால், 9 ஆண்டுகளாக இன்னும் எங்களுக்கு படம் நடித்துக் கொடுக்கவில்லை என திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது புகார் கூறியிருக்கிறது.
(4 / 6)

தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் அளித்த உத்திரவாதப்படி எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்று தருமாறு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
(5 / 6)

‘உத்தம வில்லன்’ படம் வெளியாகி இன்றோடு (மே 02) 9 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை