(2 / 6)நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவருடைய பேச்சினை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டதற்கு, அரசியல் ஆர்வலரும் இயக்குநருமான அமீர் பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார்.அதில் நடிகர் அமீர் பேசியிருப்பதாவது, ‘’நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றவர்களில் நானும் ஒருவர். தமிழராக, தமிழர் அரசியல் களத்துக்கு அவருடைய வருகையை நான் உளமார வரவேற்கிறேன். அதைத்தாண்டி, திரைத்துறையில் உச்ச நடிகராக இருக்கும்போது, அந்த துறையினை விட்டுவிட்டு, அந்த வருமானத்தை விட்டுவிட்டு, மக்கள் பணி செய்வதாக வந்திருப்பதை நாம் ஏற்புடையதாகப் பார்க்கிறோம்.தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் அம்பேத்கரையும், பெரியாரையும் கொள்கைத் தலைவர்களாக அறிவித்ததை உச்சி முகர்ந்து பாராட்டுகிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், புகழ் வெளிச்சத்தில் நிறைய இளைஞர்களின் ஆதரவில் இருக்கும் நபர்கள் அரசியலுக்கு வரும்போது, பல லட்சக்கணக்கான கண்கள் விஜயைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது''.(PTI)