தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vishal Thimiru: பப்பில் ஆட்டம் போட்ட ‘வர்மா’; வாய்ப்பு கொடுக்க சமாதானம் செய்த டைரக்டர்; திமிரு -ல் விநாயகன் வந்த கதை!

Vishal Thimiru: பப்பில் ஆட்டம் போட்ட ‘வர்மா’; வாய்ப்பு கொடுக்க சமாதானம் செய்த டைரக்டர்; திமிரு -ல் விநாயகன் வந்த கதை!

Feb 09, 2024, 08:14 PM IST

நடிகர் விஷால், ரீமா சென், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் திமிரு. இந்தப்படத்தை இயக்கியவர் தருண் கோபி. இவர் அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் திமிரு படம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார்

  தருண் கோபி டைரக்டர் பேட்டி!
(1 / 7)
  தருண் கோபி டைரக்டர் பேட்டி!
நடிகர் விஷால், ரீமா சென், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் திமிரு. இந்தப்படத்தை இயக்கியவர் தருண் கோபி. இவர் அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் திமிரு படம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார்.  
(2 / 7)

அவர் பேசும் போது, “ திமிரு படத்தில் நான் விஷாலுடன் கமிட் ஆன போது, அந்தப்படம் முழுக்க முழுக்க ஈஸ்வரி கேரக்டரின் மீது பயணிக்கிறது என்பதை புரிந்து கொண்ட விஷால் தரப்பு, அந்தக் கேரக்டருக்கு பாலிவுட் பிரபல நடிகைகளை பரிந்துரை செய்தார்கள். ஆனால் நான்தான் அந்த ஈஸ்வரி கேரக்டரில் ஸ்ரேயாதான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். மேலும் ஸ்ரேயா இல்லை என்றால் எனக்கு படம் வேண்டாம் என்று கூறினேன். இதையடுத்து ஸ்ரேயாவிடம் சென்று கதை சொல்லுங்கள் என்று கூறினர்.   
(3 / 7)

 (காளை படத்தில் தருண்) நான் அவரிடம் சென்று கதை சொன்ன போது அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. தொடர்ந்து படத்தின் கதாநாயகன் யார் என்று கேட்டார். அந்த சமயத்தில் நட்சத்திர கிரிக்கெட் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டு இருந்தது. அப்போது தற்செயலாக விஷால் பவுலிங் போட்டுக்கொண்டிருந்தார். அவரை நான் காண்பித்த போது, அதோ அந்த பிளாக் ஆளா என்று சொன்னார். அப்படித்தான் ஸ்ரேயாவை அந்த படத்திற்குள் கொண்டு வந்தேன்.  
(4 / 7)

விநாயகத்தை பொருத்தவரை, ராம்கோபால் வர்மாவின் ஜேம்ஸ் என்ற படத்தை ஒரு முறை பார்க்க நேர்ந்தது. அதில் ஹீரோவை 20 பேர் கொண்ட அடியாட்கள் குழு கொலை செய்வதற்காக துரத்திக்கொண்டே இருக்கும்.   
(5 / 7)

அந்த அடியாட்களில் குரங்கு போல ஒருவர் இருப்பார்.அந்த கேரக்டர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. தொடர்ந்து அந்த கேரக்டரில் நடித்தவரை, கோவா திரைப்பட விழாவிற்கு சென்று சமயத்தில் பார்ட்டி ஒன்றில் சந்தித்தேன். அவர் அங்கு ஆடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவரின் நம்பரை வாங்கிக்கொண்டேன் நடிப்பதற்கு கேட்டேன்.   
(6 / 7)

அவர் வேண்டாம் என்றுதான் சொன்னார். நான் தான் வலுக்கட்டாயமாக அவரிடம் நடிக்க கேட்டேன். முதலில் அந்த கேரக்டரை கஞ்சா கருப்பு தான் செய்வதாக இருந்ததனால் வடிவேலு நடித்த அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அப்படித்தான் அவரை நான் திமிரு படத்திற்குள் கொண்டு வந்தேன்.” என்று பேசினார். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை