தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thalapathy Vijay: இது அவர் கதை.. பகவதி செட்டில் சீறி வந்த பாபா; சடாரென்று துண்டை இறக்கிய விஜய்..சம்பவம் செய்த ரஜினி!

Thalapathy Vijay: இது அவர் கதை.. பகவதி செட்டில் சீறி வந்த பாபா; சடாரென்று துண்டை இறக்கிய விஜய்..சம்பவம் செய்த ரஜினி!

Jun 25, 2024, 04:23 PM IST

Thalapathy vijay: “நான் ரஜினி சாரை பார்த்துவிட்டு வந்து விடவா என்று கேட்டார். நான் அடுத்ததாக எனக்கு ஷிப்ட்டிங் இருக்கிறது அதனால், இந்த ஷாட்டை மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, நீங்கள் சென்று விடுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் வந்த உடன்” - சம்பவம் செய்த ரஜினி!

Thalapathy Vijay: இது அவர் கதை.. பகவதி செட்டில் சீறி வந்த பாபா சடாரென்று துண்டை இறக்கிய விஜய்..சம்பவம் செய்த ரஜினி
(1 / 5)

Thalapathy Vijay: பகவதி படத்தில் நடந்த சுவாரசியமான அனுபவத்தை, அந்தப்படத்தின் இயக்குநர் வெங்கடேஷ் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார். ரஜினி நடிக்க வேண்டிய கதையில் விஜய் அதில் அவர் பேசும் போது, “பகவதி படத்தின் கதையை நான் விஜய் சாரிடம் சொன்னபோது, அவர் இந்த கதையானது ரஜினி சார் நடிக்க வேண்டிய கதையாகும். இதில் நான் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டார். இதையடுத்து நான், விஜய் சாரை மிகவும் கேட்டுக் கொண்டு, சமாளித்து அந்த கதையில் நடிக்க வைத்தேன். பகவதி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அதன் அருகில் பாபா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.    
(2 / 5)

இந்த நிலையில் என்னிடம் வந்த விஜய், நான் ரஜினி சாரை பார்த்துவிட்டு வந்து விடவா என்று கேட்டார். இந்த நிலையில் நான் அடுத்ததாக எனக்கு ஷிப்ட்டிங் இருக்கிறது அதனால், இந்த ஷாட்டை மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, நீங்கள் சென்று விடுங்கள் என்று கூறினேன். அவரும் ஓகே அண்ணா என்று கூறினார்.  
(3 / 5)

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ரஜினி சார் எங்களது படப்பிடிப்பிற்குள் வந்து விட்டார். நேராக விஜய் நோக்கி வந்தவர், விஜய் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன் அதனால்தான் உடனே உங்களை பார்க்க வந்தேன் என்று சொன்னார்.   
(4 / 5)

விஜய் சார் அப்பொழுது தோளில் துண்டை போட்டிருந்தார். ரஜினி சார் வருவதைப் பார்த்த அடுத்த நொடியே, தோளிலிருந்து துண்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டார். இந்த நிலையில் முன்னதாக ரஜினிதான் இந்த கதைக்கு சரியானவர் என்று அவர் சொன்னதை குறிப்பிட்டு, பாருங்கள் சார்…அவர் படப்பிடிப்பிற்கே வந்து விட்டார் என்று கிண்டலடித்தார். இந்த நிலையில் நான் பாருங்கள் சார் இந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் உங்களை அழைத்து பாராட்டுவார் என்று கூறினேன். அதன் படியே நடந்தது.” என்று பேசினார். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை