(1 / 6)வெற்றி மாறன் சாரிடம் தான் என் போட்டோவை முதலில் கொடுத்தேன் என்றும்; எனக்குள் இருந்த தயக்கம் உடைஞ்ச அந்த இடம் பற்றியும் நடிகர் கெத்து தினேஷ் பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனிடம் கொடுத்த பேட்டியின் தொகுப்பு இது..சிறுவயதில் படிக்கும்போதே நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. என்ன மாதிரியான நடிகனாக வேண்டும் என்ற திட்டம் இருந்ததா?பதில் - ’’படிக்கும்போது புதிதாக நாம் என்ன செய்யப்போகிறோம் எனத் தோன்றியது. நடிகனாக எனக்கு முதலில் அந்த எண்ணம் இல்லையென்று நினைக்கிறேன். மிலிட்டரி போகணும்னு நினைச்சேன். ஒவ்வொன்றாக உடைந்துகொண்டே இருந்தது. அடுத்து இந்தியன் ஏர்போர்ஸ் போகலாம் அப்படின்னு சொல்லிட்டு, அதற்காக பரீட்சை எல்லாம் எழுதி, இரண்டாவது ரவுண்டில் போகமுடியலை. அடுத்து, 2001-ல் சேனல் ஆரம்பிக்கலாம் அப்படின்னு தோணுச்சு. அடுத்து எஃப்.எம். நடத்தலாம்ன்னு தோணுச்சு. எங்கப்பாவோட நண்பர் சொல்கிறார். உங்கள் பையன் ரொம்பக் கனவு காண்கிறான் எனச் சொன்னார். அப்பா, பொதுப்பணித்துறையில் கார்விங் துறையில் பணி செய்துகொண்டு இருந்தார். எனக்கான முழு சுதந்திரத்தை அப்பா கொடுத்து இருந்தார். அம்மா - அப்பா செய்த நல்லதுதான் சார்,நான் இந்த நிலையில் இருக்கக் காரணம்.அப்பாவுக்கு என்னை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் கொண்டு வரணும்னு ஆசை. அப்போது என்னமாதிரி ஆகப்போறேன்னு தெரியாம இருந்தேன். மியூஸிக் டைரக்டர் ஆகிடலாம்ன்னு தோணுச்சு. பிறகு அதுக்கு ரொம்ப இன்புட்ஸ் தேவைன்னு புரிஞ்சுக்கிட்டேன். பிறகு, சினிமா இயக்கம் போயிடலாம்ன்னு தோணுது. அப்போது கேமரா பற்றி கத்துக்கணும்னு பாலுமகேந்திரா சார்கிட்ட போயிடலாம்ன்னு முயற்சி செய்தேன். இதற்காக தினமும் காலையில் ராயபுரத்தில் 3:30 மணிக்கு எழுந்து சாலிகிராமம் வரைக்கும் நடந்தே போவேன். பிறகு, ஒருநாள் நான் எடுத்த போட்டோவைப் பார்த்திட்டு ஆபிஸ் வரச்சொல்லிட்டார், பாலு மகேந்திரா சார்’’.