தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sivakasi : தொடரும் சோகம்.. காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

Sivakasi : தொடரும் சோகம்.. காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

Jul 13, 2024, 08:12 AM IST

Sivakasi firecracker factory explosion: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சுப்ரீம் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

  • Sivakasi firecracker factory explosion: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சுப்ரீம் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
(1 / 5)

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம் போல், தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலவை அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது
(2 / 5)

இதில் அந்த அறை வெடித்து சிதறியது. அறையில் வேலை பார்த்த மாரியப்பன், முத்துவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சரோஜா, சங்கரவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
(3 / 5)

இந்நிலையில், விருதுநகரில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா என்ற பெண்மணி நேற்று மாலை உயிரிழந்தார்.மேலும் சங்கரவேல் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இதன்மூலம் காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
(4 / 5)

முன்னதாக, இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை