தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Paris 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் 7ஆம் நாள்: பேட்மிண்டன் அரையிறுதியில் லக்சயா சென்;3வது பதக்கத்துக்கு ரெடியான மனு பாக்கர்

Paris 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் 7ஆம் நாள்: பேட்மிண்டன் அரையிறுதியில் லக்சயா சென்;3வது பதக்கத்துக்கு ரெடியான மனு பாக்கர்

Aug 03, 2024, 06:40 AM IST

Paris 2024: ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை லக்‌ஷயா சென் பெற்றார். 

  • Paris 2024: ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை லக்‌ஷயா சென் பெற்றார். 
பாரிஸ் ஒலிம்பிக்கின் 7-வது நாளான நேற்று(ஆகஸ்ட் 2ல்) லக்சயா சென், மனு பாக்கர், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மற்றும் வில்வித்தை கலப்பு அணி ஜோடி அங்கிதா பகத் மற்றும் தீரஜ் பொம்மதேவரா ஆகியோருக்கு வரலாற்றுச் சம்பவம் நடந்தது. 
(1 / 6)
பாரிஸ் ஒலிம்பிக்கின் 7-வது நாளான நேற்று(ஆகஸ்ட் 2ல்) லக்சயா சென், மனு பாக்கர், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மற்றும் வில்வித்தை கலப்பு அணி ஜோடி அங்கிதா பகத் மற்றும் தீரஜ் பொம்மதேவரா ஆகியோருக்கு வரலாற்றுச் சம்பவம் நடந்தது. (PTI)
ஏற்கெனவே பாரிஸில் நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் பிஸ்டல் மற்றும் கலப்பு அணி 10 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், அதே ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதலில் தகுதிச் சுற்றில் 2-வது இடத்தைப் பிடித்த இவர், ஆகஸ்ட் மூன்றாம் தேதி சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் தனது மூன்றாவது பதக்கத்தை வெல்ல உள்ளார். 
(2 / 6)
ஏற்கெனவே பாரிஸில் நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் பிஸ்டல் மற்றும் கலப்பு அணி 10 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், அதே ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதலில் தகுதிச் சுற்றில் 2-வது இடத்தைப் பிடித்த இவர், ஆகஸ்ட் மூன்றாம் தேதி சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் தனது மூன்றாவது பதக்கத்தை வெல்ல உள்ளார். (AP)
ஒலிம்பிக்கில் கலப்பு அணி வில்வித்தை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை அங்கிதா பகத் மற்றும் தீரஜ் பொம்மதேவரா பெற்றனர். இருப்பினும் தென் கொரியாவை தாண்டி செல்ல முடியாமல் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அமெரிக்காவிடம் தோற்றது. 
(3 / 6)
ஒலிம்பிக்கில் கலப்பு அணி வில்வித்தை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை அங்கிதா பகத் மற்றும் தீரஜ் பொம்மதேவரா பெற்றனர். இருப்பினும் தென் கொரியாவை தாண்டி செல்ல முடியாமல் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அமெரிக்காவிடம் தோற்றது. (HT_PRINT)
இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கூக்கபுர்ராஸுக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
(4 / 6)
இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கூக்கபுர்ராஸுக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.(AFP)
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் லக்ஷயா சென் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சூ டியென்-சென்னை வீழ்த்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை லக்ஷயா பெற்றார். ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 4ல் நடைபெறும் வரலாற்று பதக்கத்தை வெல்லும் முயற்சியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்செல்சனை அவர் எதிர்கொள்கிறார். 
(5 / 6)
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் லக்ஷயா சென் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சூ டியென்-சென்னை வீழ்த்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை லக்ஷயா பெற்றார். ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 4ல் நடைபெறும் வரலாற்று பதக்கத்தை வெல்லும் முயற்சியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்செல்சனை அவர் எதிர்கொள்கிறார். (BAI Media -X)
இருப்பினும் இந்திய தடகள வீரர்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. ஆண்களுக்கான குண்டு எறிதல் தகுதிச் சுற்றில் தஜிந்தர்பால் சிங் தூர் 18.05 மீட்டர் தூரம் எறிந்து 15-வது இடம் பிடித்தார். பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுத்ரி, அங்கிதா ஆகியோர் நாக் அவுட் ஆனார்கள். பருல் ஹீட் இரண்டில் தனது சீசனின் சிறந்த நேரமான 15: 10.68 வினாடிகளுடன் 14ஆவது இடத்தைப் பிடித்தார், அங்கிதா 16: 19.38 வினாடிகளில் ராக் பாட்டம் 20ஆவது இடத்தைப் பிடித்தார். 
(6 / 6)
இருப்பினும் இந்திய தடகள வீரர்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. ஆண்களுக்கான குண்டு எறிதல் தகுதிச் சுற்றில் தஜிந்தர்பால் சிங் தூர் 18.05 மீட்டர் தூரம் எறிந்து 15-வது இடம் பிடித்தார். பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுத்ரி, அங்கிதா ஆகியோர் நாக் அவுட் ஆனார்கள். பருல் ஹீட் இரண்டில் தனது சீசனின் சிறந்த நேரமான 15: 10.68 வினாடிகளுடன் 14ஆவது இடத்தைப் பிடித்தார், அங்கிதா 16: 19.38 வினாடிகளில் ராக் பாட்டம் 20ஆவது இடத்தைப் பிடித்தார். (REUTERS)
:

    பகிர்வு கட்டுரை