தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cold In Srinagar:பூஜ்ஜியத்துக்கும் கீழ் சென்ற வெப்பநிலை!ஸ்ரீநகரில் கடும் குளிர்

cold in srinagar:பூஜ்ஜியத்துக்கும் கீழ் சென்ற வெப்பநிலை!ஸ்ரீநகரில் கடும் குளிர்

Dec 04, 2022, 12:09 AM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடுமையான குளிர்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையானது பூஜ்ஜியத்துக்கும் கீழ் சென்றுள்ளது.

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடுமையான குளிர்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையானது பூஜ்ஜியத்துக்கும் கீழ் சென்றுள்ளது.
ஐம்மு காஷ்மீரின் முக்கிய இடமாக கருதப்படும் தால் ஏரி அதிகாலை பொழுதில் மூடுபனியுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது
(1 / 6)
ஐம்மு காஷ்மீரின் முக்கிய இடமாக கருதப்படும் தால் ஏரி அதிகாலை பொழுதில் மூடுபனியுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது(HT Photo/Waseem Andrabi)
கடுமையான குளிர் மற்றும் மூடுபனி நிலவுவதால் பொதுமக்கள் தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ளும் விதமாக நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். காஷ்மீர் முழுவதும் இரவு வெப்பநிலை உறைபனிக்கு கீழே குறைந்துள்ளது
(2 / 6)
கடுமையான குளிர் மற்றும் மூடுபனி நிலவுவதால் பொதுமக்கள் தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ளும் விதமாக நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். காஷ்மீர் முழுவதும் இரவு வெப்பநிலை உறைபனிக்கு கீழே குறைந்துள்ளது(HT Photo/Waseem Andrabi)
இனி வரும் நாள்களில் -1.0°C அளவில் வெப்பநிலை தால் ஏரி பகுதியில் நிலவும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்
(3 / 6)
இனி வரும் நாள்களில் -1.0°C அளவில் வெப்பநிலை தால் ஏரி பகுதியில் நிலவும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்(HT Photo/Waseem Andrabi)
மூடுபனி அதிகமாக இருப்பதால் பார்வையானது மிகவும் மங்கலாக உள்ளது. தால் ஏரி பகுதியில் இருக்கும் ஹவுஸ் போட்கள் அனைத்தும் வெறும் கண்களில் பார்க்க தெரியவில்லை. உச்சபட்ச குளிர் காரணமாக பல்வேறு அடுக்குகளுடன் பொதுமக்கள் ஆடைகளை அணியத தொடங்கியுள்ளனர்
(4 / 6)
மூடுபனி அதிகமாக இருப்பதால் பார்வையானது மிகவும் மங்கலாக உள்ளது. தால் ஏரி பகுதியில் இருக்கும் ஹவுஸ் போட்கள் அனைத்தும் வெறும் கண்களில் பார்க்க தெரியவில்லை. உச்சபட்ச குளிர் காரணமாக பல்வேறு அடுக்குகளுடன் பொதுமக்கள் ஆடைகளை அணியத தொடங்கியுள்ளனர்(HT Photo/Waseem Andrabi)
ஸ்ரீநகரில் மற்றொரு புகழ் பெற்ற இடமான ஷா-இ-ஹமாதன் பள்ளி வாசல் போர்வை போர்த்தியது போல் மூடுபனியால் போர்த்தப்பட்டுள்ளது
(5 / 6)
ஸ்ரீநகரில் மற்றொரு புகழ் பெற்ற இடமான ஷா-இ-ஹமாதன் பள்ளி வாசல் போர்வை போர்த்தியது போல் மூடுபனியால் போர்த்தப்பட்டுள்ளது(AP)
தற்போது வெப்பநிலை இங்கு மிகவும் மோசமாக இருப்பதாகவும், வாகனங்களை ஓட்டுவதற்கு மிகவும் கடினமான சூழ்நிலை நிலவுவதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். வாகனத்தின் முகப்பு விளக்குகளோடு, திசை காட்டி விளக்குகளையும் எரிய விட்டு ஓட்ட வேண்டியதாகியுள்ளது என்கிறார்கள்
(6 / 6)
தற்போது வெப்பநிலை இங்கு மிகவும் மோசமாக இருப்பதாகவும், வாகனங்களை ஓட்டுவதற்கு மிகவும் கடினமான சூழ்நிலை நிலவுவதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். வாகனத்தின் முகப்பு விளக்குகளோடு, திசை காட்டி விளக்குகளையும் எரிய விட்டு ஓட்ட வேண்டியதாகியுள்ளது என்கிறார்கள்(AP)
:

    பகிர்வு கட்டுரை