தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2024இல் வெளியான டாப் தமிழ் வெப்சீரிஸ்கள்.. மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய ஓடிடி தொடர்கள் லிஸ்ட் இதோ

2024இல் வெளியான டாப் தமிழ் வெப்சீரிஸ்கள்.. மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய ஓடிடி தொடர்கள் லிஸ்ட் இதோ

Dec 22, 2024, 07:00 AM IST

 2024இந்த ஆண்டில் பிரபல ஓடிடி தளங்களில் ஏராளமான வெப்சீரிஸ்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்து டாப் தமிழ் சீரிஸ்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

  •  2024இந்த ஆண்டில் பிரபல ஓடிடி தளங்களில் ஏராளமான வெப்சீரிஸ்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்து டாப் தமிழ் சீரிஸ்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
காமெடி, பேமிலி ட்ராமா, திகில், அரசியல், ஆக்‌ஷன், த்ரில்லர் என அனைத்து பாணியிலுமான கதைக்களத்துடன் தமிழில் வெப் சீரிஸ் வெளியாகியுள்ளன. 2024ஆம் முடிவடைவதற்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் இந்த வெப்சீரிஸ்களை தவறவிட்டவர்கள் பார்த்து ரசிக்கலாம்
(1 / 11)

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ஸ்னேக் அண்ட் லேடர்ஸ் வெப்சீரிஸ் சஸ்பென்ஸ் த்ரில்லர் அட்வென்ச்சர் கதையாக உள்ளது. நந்தா, நவீன் சந்திரா, மனோஜ் பாரதிராஜா, வேட்டை முத்துக்குமார் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த சீரிஸ் மொத்தம் 9 எபிசோடுகளை கொண்டுள்ளது
(2 / 11)

இந்தியில் சூப்பர் ஹிட்டான பஞ்சாயத் என்ற சீரிஸின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருந்த தலைவெட்டியான பாளையம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது. காமெடி கதையாக இருக்கும் இதில் அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷனி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரை நாகா இயக்கியுள்ளார்
(3 / 11)

மர்மதேசம் டிவி சீரிஸ் புகழ் நாகா இயக்கத்தில் அதேபோன்றதொரு திகில் கலந்த த்ரில்லர் சீரிஸாக அமைந்திருக்கும் ஐந்தாம் வேதம், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மொத்த 8 எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸில் சாய் தன்ஷிகா, தேவதர்ஷினி, சந்தோஷ் பிரதாப், ஒய்.ஜி. மகேந்திரன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். மர்மதேசம் தொடரில் விடாது கருப்பு கதையை இயக்கிய நாகா இந்த ஐந்தாம் வேதம் சீரிஸையும் இயக்கியுள்ளார்
(4 / 11)

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தலைமை செயலகம் அரசியல் த்ரில்லர் கதைகளத்தில் அமைந்திருந்தது. மொத்தம் 8 எபிசோடுகளுடன் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, கனி குஸ்ருதி, பரத், ரம்யா நம்பீசன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள
(5 / 11)

தாமிரா இயக்கத்தில் சத்யராஜ் அறிமுகமாக வெப்சீரிஸாக மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் அமைந்துள்ளது. சீதா, ரேகா, லிவிங்ஸ்டன், ரேஷ்மா பசுபுலேட்டி, வர்ஷா பொல்லம்மா, ரக்சன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட பேமிலி ட்ராமா கதையம்சத்துடன் அமைந்துள்ளது 
(6 / 11)

காதல் கலந்த பேமிலி தொடராக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 120 எபிசோடுகளுக்கு மேல் ஸ்டிரீமிங் ஆகி கொண்டிருக்கும் வெப்சீரிஸ் உப்பு புளி காரம். பொன்வண்ணன், வனிதா கிருஷ்ணசந்திரா, ஆயிஷா ஜீனத், அஸ்வின் ஆநந்திதா, கிருஷ்ணா ரகுநந்தன், ஃபரீனா ஆஸாத் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்
(7 / 11)

மொழி பட இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் காமெடி பேமிலி ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் வெப்சீரிஸ் சட்னி சாம்பார். யோகி பாபு, வாணி போஜன், கயல் சந்திரன், நிதின் சத்யா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 எபிசோடுகளை கொண்டதாக சட்னி சாம்பார் அமைந்துள்ளது
(8 / 11)

ரொமாண்டிக் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் ஹார்ட் பீட் வெப்சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மொத்தம் 100 எபிசோடுகளுக்கு மேல் ஸ்டிரீமிங் ஆன இந்த சீரிஸில் தீபா பாலு, அனுமோல், அமித் பார்கவ் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்
(9 / 11)

ஹாரர் க்ரைம் த்ரில்லர் சீரிஸாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ரிஷி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நவீன் சந்திரா, சுனைனா, கன்னா ரவி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த தொடரை ஜே.எஸ். நந்தினி இயக்கியுள்ளார். மொத்த 10 எபிசோடுகளை கொண்டதாக இந்த சீரிஸ் அமைந்துள்ளது
(10 / 11)

கோலி சோடா படத்தின் ஸ்பின் ஆஃப் ஆக ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான தொடர் கோலிசோடை ரைசிங். மொத்தம் 10 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரை விஜய் மில்டன் மற்றும் பொன் குமரன் ஆகியோர் இயக்கியுள்ளனர். கோலி சோடா படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுடன் ஷாம், சேரன், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் உள்பட பலரும் இதில் நடித்துள்ளார்கள்
(11 / 11)

:

    பகிர்வு கட்டுரை