தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Avitham Nakshatram: ’ஜீரோவில் தொடங்கி ஹீரோ ஆவீர்கள்!’ வேகம், சீற்றம், ஆற்றல் நிரம்பிய அவிட்ட நட்சத்திரத்தின் குணநலன்கள்!

Avitham Nakshatram: ’ஜீரோவில் தொடங்கி ஹீரோ ஆவீர்கள்!’ வேகம், சீற்றம், ஆற்றல் நிரம்பிய அவிட்ட நட்சத்திரத்தின் குணநலன்கள்!

Aug 18, 2024, 03:18 PM IST

Avitham Nakshatram: அதிக சமர்த்தியம், அதிக புத்திசாலித்தனம், அதிக வேகம் பெற்றவர்கள் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் ஆவார். இவர்களுக்கு இளமையில் தடைகள் அதிகம் உண்டாகும். வாழ்கையில் ஜீரோவில் இருந்து தொடங்கி ஹிரோவாகும் நிலை அவிட்டம் நட்சத்திரத்திற்கு உண்டாகும்.

  • Avitham Nakshatram: அதிக சமர்த்தியம், அதிக புத்திசாலித்தனம், அதிக வேகம் பெற்றவர்கள் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் ஆவார். இவர்களுக்கு இளமையில் தடைகள் அதிகம் உண்டாகும். வாழ்கையில் ஜீரோவில் இருந்து தொடங்கி ஹிரோவாகும் நிலை அவிட்டம் நட்சத்திரத்திற்கு உண்டாகும்.
செவ்வாய் பகவானின் நட்சத்திரம் ஆன அவிட்டத்தின் முதல் இரண்டு பாதங்கள் மகரம் ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் கும்பம் ராசியிலும் உள்ளது. வேகம், சீற்றம், ஆற்றல் நிரம்பியது அவிட்டம். நிதானம், பொறுமை, சமயோஜிதம் நிரம்பியது சனி பகவான். 
(1 / 8)

வேகமான செவ்வாயின் நட்சத்திரம், நிதானமான சனி பகவானின் வீட்டில் உள்ளது. ஆக்ரோஷமான செவ்வாயின் நட்சத்திரம், நிதானமான சனி பகவானின் வீட்டில் உள்ளது. தனது நட்சத்திர வீட்டில் உச்சம் பெறும் விதி செவ்வாய் பகவானுக்கு உண்டு. சனி பகவான் செவ்வாயின் வீடான மேஷத்தில் நீசம் அடைவார். 
(2 / 8)

இவர்களுக்கு வேகம், கோபம், விவேகமும், நிதானமும் இருக்கும். சமர்த்தியமான செயல்பாடுகளுக்கு அதிபதியாக அவிட்ட நட்சத்திரக்காரர்கள் ஆவார். அதிக சமர்த்தியம், அதிக புத்திசாலித்தனம், அதிக வேகம் பெற்றவர்கள் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் ஆவார். இவர்களுக்கு இளமையில் தடைகள் அதிகம் உண்டாகும். வாழ்கையில் ஜீரோவில் இருந்து தொடங்கி ஹிரோவாகும் நிலை அவிட்டம் நட்சத்திரத்திற்கு உண்டாகும். 
(3 / 8)

இவர்களுக்கு கோபம் சற்று மிகுதியாக இருக்கும். ஆனால் இந்த கோபம் சனி பகவானுக்கு உட்பட்டது என்பதால் நிதானத்திற்கு உட்பட்டு இருக்கும். சட்டென்று வேகமாக முடிவெடுக்கும் தன்மை இவர்களுக்கு இருந்தாலும், அது மற்றவர்களை காயப்படுத்திவிடாதவாறு பார்த்துக் கொள்வார்கள். தங்களின் எதிர்ப்பை பொறுமையாக வெளிப்படுத்தும் தன்மையை இவர்கள் கொண்டு இருப்பார்கள். 
(4 / 8)

18 ஆண்டுகால ராகு தசை காரணமாக இளமை காலம் இவர்களுக்கு சிறப்பாக அமைந்துவிடுவது இல்லை. சனி பகவானுக்கு ராகு நட்பு கிரகம் என்பதால் கல்வியில் கெடுதல் தருவதில்லை என்றாலும் கூட செவ்வாய்க்கு ராகு அவ்வளவாக நட்பு கிரகம் இல்லை என்பதால் கல்வியில் சில இடைஞ்சல்களை தந்து அதன் பிறகு உயரம் தொட வைப்பார். 
(5 / 8)

செவ்வாய்- சனி- ராகு தொடர்பு என்பது இயந்திர பொறியியல் அறிவை தரக்கூடியதாக இருக்கும். இந்த அமைப்பு சற்று போராட்டமான அமைப்பை தரும்.  இவர்கள் நிதான போக்கை கடைப்பிடிப்பது நிறைய நன்மைகளை உண்டாக்கும். போராட்டம் குணம் நிறைந்த இவர்கள் தனது வாழ்வியல் லட்சியத்தை அடைந்தே தீருவார்கள். 
(6 / 8)

24 வயதிற்கு மேல் இவர்களுக்கு குரு மகா திசை தொடங்கிவிடும் என்பதால் பொருள் மேன்மை, குடும்ப மேன்மை, சமுதாய அந்தஸ்து ஆகியவற்றை அடைந்துவிடுவார்கள். 
(7 / 8)

அவிட்டம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அரசு பதவி, அதிகாரத்திற்கான வாய்ப்புகள் உருவாக்கி தரும். அவிட்டம் 2ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்சத்தில் சந்திரன் கன்னி ராசியில் இருப்பார். உயர்கல்வியை எட்டிப்பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், போராடி அதை அடைந்து அதன் மூலம் வெற்றி பெறுவார்கள். அவிட்டம் 3ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கலைகள், பிரயாணங்களில் ஆர்வம் இருக்கும். உயர்கல்வியில் ஆர்வம், உயர் பதவிகளை அடைவது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். அவிட்டம் 4அம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அரசு துறையில் உத்யோகம், அடிமட்ட அரசு வேலைகளில் பணி ஆகியவை உண்டாகும்.  
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை