தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bp Control : கோடையில் உங்கள் பிபியை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்க இந்த உணவுகள்தான் தேவை!

BP Control : கோடையில் உங்கள் பிபியை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்க இந்த உணவுகள்தான் தேவை!

May 03, 2024, 11:07 AM IST

BP Control in Summer : கோடையில் உங்கள் பிபியை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்க இந்த 7 விஷயங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

  • BP Control in Summer : கோடையில் உங்கள் பிபியை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்க இந்த 7 விஷயங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 
கோடையில், மக்கள் பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். ரத்த அழுத்தத்தைப் பற்றி கொஞ்சம் அலட்சியம் காட்டினால் கூட பல தீவிர நோய்களின் பிடியில் சிக்கிக்கொள்ள நேரிடும். அந்த வகையில், உங்கள் பிபியை கட்டுக்குள் வைத்திருக்க இந்த 7 உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
(1 / 10)

உயர் ரத்த அழுத்தம் பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதிக உப்பு உட்கொள்ளல், குறைந்த பொட்டாசியம், அதிகப்படியான மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.
(2 / 10)

உயர் ரத்த அழுத்தம், இதயம் பெரிதாகுதல், சேதமடைந்த ரத்த நாளங்கள், சிறுநீரக செயலிழப்பு, இதய செயலிழப்பு மற்றும் பார்வையிழப்பு உட்பட பல நோய்களை ஏற்படுத்தும்.
(3 / 10)

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இதனால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியதாக இருக்கும்.
(4 / 10)

தயிரில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. அதை அடிக்கடி எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும்.
(5 / 10)

மாதுளையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைத்து உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மாதுளை சாறு உட்கொள்வது சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். பிபி அளவை சாதாரணமாக வைத்திருக்க தினமும் ஒரு டம்ளர் மாதுளை சாறு அருந்தலாம்.
(6 / 10)

கோடையில், தேங்காய் தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, இயற்கையான டையூரிடிக் ஆகவும் செயல்படுகிறது. எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கும்போது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
(7 / 10)

கோடையில் தர்பூசணி சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி, அதிக பிபியையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. கோடையில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். இது தவிர, தர்பூசணியில் உள்ள மெக்னீசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
(8 / 10)

வைட்டமின் சி தவிர, எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இது உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
(9 / 10)

நீங்கள் உயர் ரத்த அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக உங்கள் உணவில் நாவல் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன.
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை