தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kangana:இந்திரா பற்றி படமெடுத்த பாஜக எம்.பி.கங்கனா.. இழுத்தடிக்கும் சென்சார்.. கவலையை நீக்கி கார் வாங்கிய கங்கனா

Kangana:இந்திரா பற்றி படமெடுத்த பாஜக எம்.பி.கங்கனா.. இழுத்தடிக்கும் சென்சார்.. கவலையை நீக்கி கார் வாங்கிய கங்கனா

Sep 29, 2024, 09:03 PM IST

Kangana:இந்திரா பற்றி படமெடுத்த பாஜக எம்.பி.கங்கனா.. இழுத்தடிக்கும் சென்சார்.. கவலையை நீக்கி கார் வாங்கிய கங்கனா குறித்து விரிவாக அறிந்துகொள்வோம். 

  • Kangana:இந்திரா பற்றி படமெடுத்த பாஜக எம்.பி.கங்கனா.. இழுத்தடிக்கும் சென்சார்.. கவலையை நீக்கி கார் வாங்கிய கங்கனா குறித்து விரிவாக அறிந்துகொள்வோம். 
Kangana Ranaut: ரூ.32 கோடிக்கு மும்பை பங்களாவை விற்ற கங்கனா மற்றும் சூட்டோடு சூடாக வாங்கிய கார் மற்றும் அதன்விலை எவ்வளவு தெரியுமா என்பது குறித்துப் பார்ப்போம்.
(1 / 7)
Kangana Ranaut: ரூ.32 கோடிக்கு மும்பை பங்களாவை விற்ற கங்கனா மற்றும் சூட்டோடு சூடாக வாங்கிய கார் மற்றும் அதன்விலை எவ்வளவு தெரியுமா என்பது குறித்துப் பார்ப்போம்.
Kangana Ranaut: நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி படத்தின் வெளியீடு சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இந்த தாமதத்திற்கு மத்தியில், நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை கங்கனா ரனாவத், தனது பாலி ஹில் பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்றார். இப்போது நடிகை கங்கனா ரனாவத், தனக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள புதிய Range Rover காரை வாங்கியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத் கார் வாங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் Land Rover Modi Motorsன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில், நடிகை கங்கனா ரனாவத் புதிய சொகுசு காரை வாங்கிய படங்களைப் பகிர்ந்து இருந்தது. 
(2 / 7)
Kangana Ranaut: நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி படத்தின் வெளியீடு சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இந்த தாமதத்திற்கு மத்தியில், நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை கங்கனா ரனாவத், தனது பாலி ஹில் பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்றார். இப்போது நடிகை கங்கனா ரனாவத், தனக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள புதிய Range Rover காரை வாங்கியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத் கார் வாங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் Land Rover Modi Motorsன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில், நடிகை கங்கனா ரனாவத் புதிய சொகுசு காரை வாங்கிய படங்களைப் பகிர்ந்து இருந்தது. (PTI)
புதிய கார் வாங்கிய கங்கனா ரனாவத்:அதில் நடிகை கங்கனா ரனாவத் தனது புதிய சொகுசு காரின் முன் எடுத்த படங்களைக் காணமுடிந்தது. அந்தப் படங்களில் வெள்ளை சல்வார்-கமீஸில் கங்கனா ரனாவத் காணப்பட்டார். மேலும் சில படங்களில் மருமகன் அஸ்வத்தாமாவுடன், ஆரத்தி மற்றும் வண்டியின் சாவியுடன் கார் பூஜை செய்ய போஸ் கொடுத்தார். நடிகை கங்கனா ரனாவத் வாங்கிய புதிய லேண்ட் ரோவர் ரோவர் ஆட்டோபயோகிராபி எல்.பி.டபிள்யூ (Land Rover Range Rover Autobiography LWB) காரின் விலை மும்பை சந்தை மதிப்பின்படி ரூ.3.81 கோடி ஆகும். இது ஐந்து இருக்கைகள் கொண்ட சொகுசு காராகும்.
(3 / 7)
புதிய கார் வாங்கிய கங்கனா ரனாவத்:அதில் நடிகை கங்கனா ரனாவத் தனது புதிய சொகுசு காரின் முன் எடுத்த படங்களைக் காணமுடிந்தது. அந்தப் படங்களில் வெள்ளை சல்வார்-கமீஸில் கங்கனா ரனாவத் காணப்பட்டார். மேலும் சில படங்களில் மருமகன் அஸ்வத்தாமாவுடன், ஆரத்தி மற்றும் வண்டியின் சாவியுடன் கார் பூஜை செய்ய போஸ் கொடுத்தார். நடிகை கங்கனா ரனாவத் வாங்கிய புதிய லேண்ட் ரோவர் ரோவர் ஆட்டோபயோகிராபி எல்.பி.டபிள்யூ (Land Rover Range Rover Autobiography LWB) காரின் விலை மும்பை சந்தை மதிப்பின்படி ரூ.3.81 கோடி ஆகும். இது ஐந்து இருக்கைகள் கொண்ட சொகுசு காராகும்.
இதுதொடர்பாக லேண்ட் ரோவர் பகிர்ந்த பதிவில், "பாலிவுட்டின் ராணி, கங்கனா ரனாவத், அவரது ரேஞ்ச் ரோவரின் அற்புதமான புதிய சவாரிக்கு வாழ்த்துகள். வெள்ளித்திரையை ஆள்வது முதல் ஸ்டைலாக சாலைகளை வெல்வது வரை, எப்படி ஒன்றை வெளியிடுவது என்பது வரை உங்களுக்கு எப்போதும் தெரியும். இந்த பவர்ஹவுஸ் கார் சிறந்ததைவிட குறைவாக எதுவும் இல்லை.இந்த மிதக்கும் ஆடம்பரமான காரில், ஒவ்வொரு பயணமும் தைரியமானது, பயமற்றது. உங்களது வெற்றியாலும் திறந்த மனப்பான்மையாலும் எங்கள் எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்’’எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
(4 / 7)
இதுதொடர்பாக லேண்ட் ரோவர் பகிர்ந்த பதிவில், "பாலிவுட்டின் ராணி, கங்கனா ரனாவத், அவரது ரேஞ்ச் ரோவரின் அற்புதமான புதிய சவாரிக்கு வாழ்த்துகள். வெள்ளித்திரையை ஆள்வது முதல் ஸ்டைலாக சாலைகளை வெல்வது வரை, எப்படி ஒன்றை வெளியிடுவது என்பது வரை உங்களுக்கு எப்போதும் தெரியும். இந்த பவர்ஹவுஸ் கார் சிறந்ததைவிட குறைவாக எதுவும் இல்லை.இந்த மிதக்கும் ஆடம்பரமான காரில், ஒவ்வொரு பயணமும் தைரியமானது, பயமற்றது. உங்களது வெற்றியாலும் திறந்த மனப்பான்மையாலும் எங்கள் எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்’’எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. (HT_PRINT)
தனது பங்களாவை விற்ற நடிகை கங்கனா:இந்த மாதத்தொடக்கத்தில், நடிகை கங்கனா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா ஃபிலிம்ஸின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்ட தனது மும்பை பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்றார். மணிகர்னிகா ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் எமர்ஜென்சி செப்டம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.ஆனால், கடைசி நேரத்தில் இப்படத்தின் திரையீடு நிறுத்தப்பட்டது.
(5 / 7)
தனது பங்களாவை விற்ற நடிகை கங்கனா:இந்த மாதத்தொடக்கத்தில், நடிகை கங்கனா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா ஃபிலிம்ஸின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்ட தனது மும்பை பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்றார். மணிகர்னிகா ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் எமர்ஜென்சி செப்டம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.ஆனால், கடைசி நேரத்தில் இப்படத்தின் திரையீடு நிறுத்தப்பட்டது.(HT_PRINT)
இதுதொடர்பாக, நடிகை கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பதிவில், "கனத்த இதயத்துடன் நான் இயக்கிய எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறேன். நாங்கள் இன்னும் சென்சார் போர்டின் சான்றிதழுக்காக காத்திருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி" என்று நடிகை கங்கனா எக்ஸ் தளத்தில் பதிவுசெய்தார். 
(6 / 7)
இதுதொடர்பாக, நடிகை கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பதிவில், "கனத்த இதயத்துடன் நான் இயக்கிய எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறேன். நாங்கள் இன்னும் சென்சார் போர்டின் சான்றிதழுக்காக காத்திருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி" என்று நடிகை கங்கனா எக்ஸ் தளத்தில் பதிவுசெய்தார். (HT_PRINT)
1975ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் 21 மாத அவசர காலத்தை விதித்த இந்திரா காந்தியின் வாழ்க்கையை நடிகை கங்கனாவின் ‘’எமர்ஜென்ஸி’’ திரைப்படம் குறிப்பிட்டு சுட்டிக்காட்டுகிறது. இத்திரைப்படத்திலும் எமர்ஜென்ஸி நிலை குறித்துப் பேசப்படப்போகிறது.’’எமர்ஜென்ஸி’’ திரைப்படத்தில் கங்கனா ரனாவத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இப்படத்தில் எமர்ஜென்ஸி திரைப்படம், இந்தியாவின் அவசரநிலையை வெளிப்படுத்துவதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மேலும் இக்காலகட்டத்தில் பல சீக்கிய குழுக்கள் சந்தித்த பின்னடைவுகள் பற்றிப் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
(7 / 7)
1975ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் 21 மாத அவசர காலத்தை விதித்த இந்திரா காந்தியின் வாழ்க்கையை நடிகை கங்கனாவின் ‘’எமர்ஜென்ஸி’’ திரைப்படம் குறிப்பிட்டு சுட்டிக்காட்டுகிறது. இத்திரைப்படத்திலும் எமர்ஜென்ஸி நிலை குறித்துப் பேசப்படப்போகிறது.’’எமர்ஜென்ஸி’’ திரைப்படத்தில் கங்கனா ரனாவத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இப்படத்தில் எமர்ஜென்ஸி திரைப்படம், இந்தியாவின் அவசரநிலையை வெளிப்படுத்துவதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மேலும் இக்காலகட்டத்தில் பல சீக்கிய குழுக்கள் சந்தித்த பின்னடைவுகள் பற்றிப் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. (HT_PRINT)
:

    பகிர்வு கட்டுரை