(3 / 6)'’ஜெயம் ரவி பிரதர் பட ஆடியோ லாஞ்ச்-க்கு கூட வாடகை காரில் வந்தார் என்பது உண்மைதான். சென்னை - அடையாறில் அவருக்கு ஃபிளாட் இருக்கு. அவர் அங்க இருந்து தான், எனக்கு பேட்டி கொடுத்தார். மற்றபடி, அவர் சம்பாதிச்ச பெரும்பணம் ஆர்த்திகிட்டேயும், ஆர்த்தியின் அம்மாவிடமும் தான் இருக்குதுன்னு சொன்னார். இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிட்டாங்க. செக் புக்கை கூட எனக்குத் தரலை, அப்படின்னு சொன்னார்.நான் ஜெயம் ரவிகிட்ட, உங்களது பிரச்னையை அப்பாகிட்ட சொன்னீங்களான்னு கேட்டேன். நான் என்னுடைய விவகாரத்தை முழுதாகச் சொன்னேன்னு சொன்னார். அதன்பின், தான் அப்பா சொன்னார், உன் விருப்பப்படி என்ன முடிவு எடுக்கிறயோ, அதை எடு. அதற்கு நான் முழு சப்போர்ட் செய்கிறேன் என்று ரவியின் தந்தை சொல்லியிருக்கிறார். இரண்டு தடவை ரவி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகவும், முதல் நோட்டீஸின்போது தனது மாமியார் சுஜாதா விஜயகுமார் தன் அப்பாவிடம் வந்து பேசியதாகக் கூறினார். அந்தப் பேச்சுவார்த்தையில் ஜெயம் ரவியின் அப்பா, தன் மகன் சார்பில் வைத்த கேள்விகளுக்கு சுஜாதா விஜயகுமார் தரப்பில் எந்தவொரு பதிலையும் கூறாமல் திரும்பிவிவிட்டதாக ஜெயம் ரவி என்னிடம் கூறினார். இதுதான் நடந்தது’’.