(1 / 6)இதுதொடர்பாக கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’சூர்யாவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவந்த எந்தப் படமும் சரியாகபோகவில்லை. எதற்கும் துணிந்தவன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்தார், சூர்யா. இந்த படம் அட்டர் ஃபிளாப். இதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின்,மிகவும் சிரமப்பட்டு, வொர்க் அவுட் செய்து, தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படம், கங்குவா. இந்தப் படம் சிறுத்தை சிவாவின் கதை, திரைக்கதை மோசமாக இருந்ததால், இப்படம் வெற்றிபெறவில்லை.கங்குவா படத்தைத் தயாரிக்க ரூ.300 கோடி வரை ஆனது என படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தெரிவித்தார். போட்ட முதலீடு அளவுக்கு கங்குவா வசூலைப் பெறுமா என்றால் சந்தேகம்.கங்குவா படத்துக்குப் போட்ட முதலீடு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், கங்குவா படத்தை விமர்சித்தவர்கள் எல்லோருமே, ‘கங்குவா நன்றாக இல்லை.. நன்றாக இல்லை’ எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால், விமர்சனமும் படம் நன்றாக இல்லாததும் காரணமாக கங்குவா படம் வசூலைப் பெறவில்லை என்பது தான் உண்மை''.