(4 / 6)‘’அதன்பின், அவர் மனைவியை திரைப்படத்துக்கு அனுப்பிவிட்டு, இரவு அவரது வீட்டில் அசைவ தடபுடல் விருந்து எனக்காக வைத்தார், வினுச்சக்கரவர்த்தி. அதன்பின், மறுநாள், அவரை அப்பெண்ணின் இல்லத்தில் அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட்டேன். சுசுமிதா என்ற பெயரை மாற்றி, ஸ்மிதா எனப்பெயர் மாற்றினார், வினுச்சக்கரவர்த்தி.ஸ்மிதாவின் வாழ்க்கையில் உதவியமைக்காக, அவரது பல படங்களில் கணவனாக நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். எப்போதுமே என்னிடம் மரியாதையாகப் பேசுவாங்க. சாப்பாடு எதுவும் சாப்பிடமாட்டாங்க, பேரீட்சைப் பழம், பிஸ்தா, உலர் பழங்களைத் தான் சாப்பிடுவாங்க. உடல் எடை போட்டுவிடக்கூடாது என்பதற்காக ஜூஸ் குடிப்பாங்க. எனக்கொரு பாக்கெட் கொடுத்துவிடுவாங்க. நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரி, சில்க் ஸ்மிதா. எனக்கு வழிகாட்டியாக வைச்சிருக்கேன்.மூன்றாம் பிறை படத்தில் கமல்ஹாசன், சில்க் ஸ்மிதா பாடல் இடம்பெற்றிருந்தது. அதன்பின், பாலுமகேந்திரா, சில்க் ஸ்மிதாவின் பரம ரசிகர் ஆனார். இந்தப் படத்துக்குப் பின், பாலுமகேந்திரா பல படங்களில் சில்க் ஸ்மிதாவுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார்.சில்க் ஸ்மிதா வில்லி, காமெடி, கவர்ச்சி, கதாநாயகி என பல வேடங்களில் முத்திரைப் பதித்தவர். தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என நான்கு மொழிகளிலும் அவர் பல நடிகர்களுடன் நடனமாடி ஹிட் கொடுத்தவர்.''.