தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஈகோவின் உச்சம்.. சீறி வந்த கார்..ஆடைகளை அவிழ்த்து எறிந்த சிவகுமார்.. அதிர்ந்து போன செட்! - பெளர்ணமி அலைகள் பரிதாபங்கள்!

ஈகோவின் உச்சம்.. சீறி வந்த கார்..ஆடைகளை அவிழ்த்து எறிந்த சிவகுமார்.. அதிர்ந்து போன செட்! - பெளர்ணமி அலைகள் பரிதாபங்கள்!

Nov 12, 2024, 07:38 AM IST

சிவகுமார் அனுமதி தரவில்லை என்ற கோபத்தில் இருந்த சிவகுமார் தான் அணிந்த ஆடைகள் அனைத்தையும் கோபத்தில் தூக்கி போட்டுவிட்டு, உங்கள் கம்பெனி ஆடையை கொண்டு வாருங்கள் என்று கத்தினார். 

(1 / 6)

சிவகுமாருக்கும், இயக்குனர் பாஸ்கருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பாஸ்கர் மகன் பாலாஜி பிரபு பேசி இருக்கிறார்இது குறித்து பெட்டர் டுடே யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேசிய அவர், "சிவகுமார் சாரும், அப்பாவும் இணைந்து தொடர்ந்து திரைப்படங்களை செய்து வந்தார்கள். அப்பா அப்போது தொடர்ந்து மூன்று கிரைம் கதைகளை படமாக்கி இருந்தார்.   
(2 / 6)

ஆகையால், கொஞ்சம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக காதல் கதையை எடுக்க முடிவு செய்தார். அப்படி அவர் உருவாக்கிய கதைதான் ‘பௌர்ணமி அலைகள்.’அந்தப் படத்தின் கதையையும் சிவகுமாரிடம் சொல்ல, அவருக்கும் கதை பிடித்து விட்டது. தொடர்ந்து படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அனுமதி கேட்ட சிவகுமார்!முதல் நாள் ஊட்டியில் ஷுட்டிங். அதற்கு முந்தைய நாள் சிந்து பைரவி படத்தினுடைய விழா நடைபெற்றது. அதில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பங்கேற்றார். அதில் சிவக்குமார் சாரும் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை உருவானது.  இதையடுத்து சிவகுமார் சார்   அவருடைய மேனேஜரை அனுப்பி  ஒரே ஒரு நாள் மட்டும் அனுமதி  வேண்டும் என்று கேட்க, அப்பா  எல்லாமே ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு விட்டது. இப்போது திடீரென்று ஒரு நாள் அனுமதி கேட்டால், எல்லாமே சிதையும் என்று கூறி இருக்கிறார்.  
(3 / 6)

இதை மேனேஜர் சிவகுமார் சாரிடம் வந்து சொல்ல, சிவகுமார் டென்ஷன் ஆகிவிட்டார். இத்தனை படங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவ்வளவு நட்புறவாக இருந்திருக்கிறோம். ஆனாலும், அவர் ஒரு நாள் விடுமுறை தரவில்லையே என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அப்பா அனுப்பிய ரயில் டிக்கெட்டையும் மேனேஜரிடம் கொடுத்து திருப்பி அனுப்பி விட்டார். அப்படியானால், சிவக்குமார் ஷூட்டிங் வரமாட்டாரோ என்று சந்தேகம் அப்பாவிற்கு வந்து விட்டது.  ஆனாலும், அவர் தன்னுடைய குழுவை கூட்டிக்கொண்டு திட்டமிட்டபடி ஊட்டிக்கு ஷூட்டிங் சென்று விட்டார். அப்போதெல்லாம் முதல் நாள் ஹீரோவை வைத்து தான் முதல் ஷாட்டை எடுப்பார்கள். மணி காலை 6 ஆகிவிட்டது. 7 மணிக்கு ஷுட்டிங் தொடங்க வேண்டும். சிவகுமார் அங்கு இல்லை. டென்ஷன் ஆன அப்பா,  சிகரெட்டை அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். இதற்கிடையே சிந்து பைரவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவக்குமார்,இரவோடு இரவாக காரில் வேகமாக கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு வந்துவிட்டார். சரியாக 6.59 மணிக்கு அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து விட்டார். 
(4 / 6)

துணிகளை தூக்கி எறிந்த சிவகுமார்! அனுமதி தரவில்லை என்ற கோபத்தில் இருந்த சிவகுமார் தான் அணிந்த ஆடைகள் அனைத்தையும் கோபத்தில்தூக்கி போட்டுவிட்டு, உங்கள் கம்பெனி ஆடையை கொண்டு வாருங்கள் என்று கத்தினார். இதையடுத்து காஸ்ட்யூமர் ஆடைகளை கொடுக்க, அவர் ஆடைகளை அணிந்து நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படம் முழுக்கவும் அப்பாவும், சிவகுமார் சாரும் பேசிக் கொள்ளவே இல்லை. 
(5 / 6)

அப்போது எப்படி ஷூட்டிங் நடந்திருக்கும் என்று உங்களுக்கு தோன்றலாம். தினமும் அப்பாவிடம் ஷூட்டிங்கிற்கு வரும் சிவகுமார் மரியாதைக்காக காலை குட் மார்னிங் என்பார்.  கிளம்பும்போது கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு செல்வார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒன் மோர் வேண்டுமென்றால், அசிஸ்டன்ட் டைரக்டரை கூப்பிட்டு, உங்கள் டைரக்டரிடம் ஒன் மோர் வேண்டும் என்று சொல்லுங்கள் என்று சொல்வார். இதையே அப்பாவும் செய்வார். அப்படியே ஷூட்டிங் முடிந்தது. கடைசி நாள் அப்பாவிடம் சென்று கிளம்புகிறேன் என்று சிவக்குமார் கூறும் பொழுது, அப்பா படம் தயார் ஆன உடனே அழைப்பு விடுக்கிறேன் என்று சொல்ல, சிவக்குமார் சாரோ நான் தியேட்டரிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி சென்று விட்டார்." என்று பேசினார்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை