தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நெல்லிக்காயை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி வீசப்போகிறீர்களா? வேண்டாம்! ஏன் தெரியுமா?

நெல்லிக்காயை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி வீசப்போகிறீர்களா? வேண்டாம்! ஏன் தெரியுமா?

Oct 14, 2024, 12:58 PM IST

நெல்லிக்காயை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி வீசப்போகிறீர்களா? வேண்டாம்! ஏன் தெரியுமா?

  • நெல்லிக்காயை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி வீசப்போகிறீர்களா? வேண்டாம்! ஏன் தெரியுமா?
நீங்கள் சாப்பிட்டுவிட்டு வேண்டாம் என்று தூக்கி வீசப்போகும் நெல்லி விதைகளில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளன. நெல்லிக்காயின் உள்ளே விதைகள் இருக்கும். அவை நெல்லி விதைகள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் முக்கிய வைட்டமின்களும் உள்ளன. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உணவுக்கு ஆரோக்கியமான அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும். நெல்லி விதைகளை காயவைத்து பொடியாக்கி அல்லது அரைத்து பேஸ்ட்டாக்கி, தேநீர், ஸ்மூத்திகள் மற்றும் சரும பராமரிப்பு வீட்டு தீர்வுகளுடன் சேர்த்து பயன்படுத்தவேண்டும். அவற்றை காயவைத்து நேரடியாக உட்கொள்ளலாம். இது மூலிகை மருந்துகளின் உட்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. நெல்லி விதைகளில் உள்ள எண்ணற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 10)

செரிமான ஆரோக்கியம் - நெல்லி விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது செரிமானத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குடலை முறையாகப் பராமரிக்கும். மலச்சிக்கலைத் தடுக்கும். செரிமான மண்டலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். செரிமானத்துக்கு தேவைப்படும் திரவம் சுரப்பதை நெல்லி விதைகள் தூண்டும். இதனால் வயிறு உப்புசம், சாப்பிட்டவுடன் அசவுகர்யங்கள் எதுவும் இன்று உணவு எளிதாக செரிக்க வைக்கப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்ச உதவியாக இருக்கும்.
(2 / 10)

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது - நெல்லி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக வைட்டமின் சி மற்றும் மற்ற பாலிஃபினால்கள், உடலில் நச்சு வாய்ந்த ஃப்ரி ராடிக்கல்களை சமப்படுத்தும். ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தை குறைக்கும். இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் குணங்கள் ஆரோக்கியமான வயோதிகத்தை தரும். செல்கள் சேதமடைவதை தடுக்கும்.
(3 / 10)

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் - நெல்லி விதைகளில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் உட்பொருட்கள், அதன் அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்களில் இருந்து கிடைக்கின்றன. இந்த விதைகள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. தொற்றுக்களை அடித்து விரட்டி, நோய்களை சிறப்பான முறையில் குணப்படுத்துகிறது. நெல்லி விதைகளை அன்றாடம் உட்கொள்வது உங்கள் உடலை பொதுவான தொற்றுக்களில் இருந்து காக்கிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகள் அடிக்கடி ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.
(4 / 10)

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - நெல்லி விதைகள் இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இதன் கொழுப்பைக் குறைக்கும் திறன் அதற்கு உதவுகிறது. நெல்லி விதைகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கின்றன. இது தமனிகளில் ப்ளேகுகள் உருவாகும் ஆபத்தை குறைக்கிறது. இது இதயநோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
(5 / 10)

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது - நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கவும் உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தும் தீர்வாகும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வது தடுக்கப்பட்டு, நீரிழிவு நோயுடன் தொடர்புடையை பிரச்னைகள் காக்கப்படுகிறது.
(6 / 10)

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - நெல்லிக்காயின் விதைகளில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொலாஜென் உற்பத்தியை தூண்டும் ஆற்றல் உள்ளது. அதற்கு வைட்டமிக் சி சத்துக்கள் காரணமாகின்றன. இது சரும நெகிழ்தன்மையை பராமரிக்க உதவுகிறது. வயோதிகத்தை தடுக்கிறது. முகச்சுருக்கங்கள், சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் குணங்கள் நெல்லி விதைகளை சுற்றுச்சூழல் மற்றும் மாசு, புறஊதா கதிர்களின் தாக்கத்தால், சருமம் பாதிக்கப்படாமல் காக்க வைக்கிறது.
(7 / 10)

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது - நெல்லி விதைகள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தலைமுடி சேதத்தை தடுக்கிறது. இளநரையைப் போக்குகிறது. நெல்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை தலையில் தேய்க்கும்போது, அது தலைமுடியை பளபளப்பாக்குகிறது, வலுவாக்குகிறது மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தைக் காக்கிறது.
(8 / 10)

உடல் எடையை முறையாகப் பராமரிக்கிறது - நெல்லி விதையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கின்றன. இது உங்களுக்கு பசியைப் போக்கி, அதிகம் உணவு உட்கொள்வதை தடுக்கிறது. இது உங்கள் உடல் வளர்சிதையை மேம்படுத்துகிறது. கொழுப்பை குறைத்து, உங்கள் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கிறது. உங்கள் சரிவிகித உணவில் நெல்லி விதைகளையும் சேர்த்துக்கொண்டு உங்களுக்கு உடல் பருமன் மற்றும் அது தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்த்துவிடுங்கள்.
(9 / 10)

பொறுப்பு துறப்பு - இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை