தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Home Puja Tips: ஆன்மிகம் அறிவோம் !வீட்டில் பூஜை செய்வது எப்படி?

Home Puja Tips: ஆன்மிகம் அறிவோம் !வீட்டில் பூஜை செய்வது எப்படி?

Jun 18, 2023, 01:35 PM IST

Puja At Home: வீட்டில் பூஜை செய்வது பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து இங்கு சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.

  • Puja At Home: வீட்டில் பூஜை செய்வது பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து இங்கு சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.
தினமும் காலை, மாலை வேளைகளில் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். விளக்கை ஏற்றி இந்த விளக்கை போல தெய்வத்தின் அருள் என் வாழ்க்கையில் உள்ள இருமையை அகற்றி ஒளிரட்டும் என்று நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். 
(1 / 7)
தினமும் காலை, மாலை வேளைகளில் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். விளக்கை ஏற்றி இந்த விளக்கை போல தெய்வத்தின் அருள் என் வாழ்க்கையில் உள்ள இருமையை அகற்றி ஒளிரட்டும் என்று நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். (Gettyimages)
சாந்தமான தெய்வ வழிபாடு வீட்டில் அமைதியை கொடுக்கும். குல தெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது நல்ல பலன்களை தரும். ஒரு நாளைக்கு மூன்று முறை பூஜை செய்ய முடியாவிட்டால் காலை ஒரு நேரமாவது சந்தனம், பூக்கள் போன்றவற்றை வைத்து பூஜை செய்யுங்கள். 
(2 / 7)
சாந்தமான தெய்வ வழிபாடு வீட்டில் அமைதியை கொடுக்கும். குல தெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது நல்ல பலன்களை தரும். ஒரு நாளைக்கு மூன்று முறை பூஜை செய்ய முடியாவிட்டால் காலை ஒரு நேரமாவது சந்தனம், பூக்கள் போன்றவற்றை வைத்து பூஜை செய்யுங்கள். (Gettyimages)
வீட்டில் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது நல்ல பலன்களை தரும். பூஜை செய்யும் போது வெறும் கற்சிலை அல்லது படங்களை வணங்குகிறோம் என்று நினைக்கக் கூடாது. சக்தி வாய்ந்த தெய்வம் நம் முன் இருக்கிறார் என்ற பாவனையோடு பூஜை செய்ய வேண்டும். 
(3 / 7)
வீட்டில் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது நல்ல பலன்களை தரும். பூஜை செய்யும் போது வெறும் கற்சிலை அல்லது படங்களை வணங்குகிறோம் என்று நினைக்கக் கூடாது. சக்தி வாய்ந்த தெய்வம் நம் முன் இருக்கிறார் என்ற பாவனையோடு பூஜை செய்ய வேண்டும். (Gettyimages)
நல்ல வாசனை உள்ள ஊதுபத்தி, சாம்பிராணிப் பயன்படுத்தி பூஜை செய்யலாம். பூஜை செய்யும் பொழுது ஊதுவத்தியாக இருந்தாலும் சரி, சாம்பிராணியாக இருந்தாலும் சரி அதை வலதுபுறமாக சுற்றிதான் பூஜை செய்ய வேண்டும். ஊதுபத்தியை சாமியின் முன்பு மூன்று முறை சுற்றி காட்டி வையுங்கள். 
(4 / 7)
நல்ல வாசனை உள்ள ஊதுபத்தி, சாம்பிராணிப் பயன்படுத்தி பூஜை செய்யலாம். பூஜை செய்யும் பொழுது ஊதுவத்தியாக இருந்தாலும் சரி, சாம்பிராணியாக இருந்தாலும் சரி அதை வலதுபுறமாக சுற்றிதான் பூஜை செய்ய வேண்டும். ஊதுபத்தியை சாமியின் முன்பு மூன்று முறை சுற்றி காட்டி வையுங்கள். (Gettyimages)
நைவேத்யம் என்பது நாம் சமைத்து தான் வைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உலர் திராட்சை, கற்கண்டு, சர்க்கரை, பழ வகைகள் இவற்றுள் உங்களால் எது முடியுமோ அதை வாங்கி வைத்து தினசரி இறைவனுக்கு படைத்து பூஜை செய்யலாம். நைவேத்யம் செய்த பிறகு மீதமுள்ள உணவை கலந்து எல்லாருக்கும் கொடுங்கள். இதை சாப்பிடுபவர் எல்லாரும் பலனடைவர். 
(5 / 7)
நைவேத்யம் என்பது நாம் சமைத்து தான் வைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உலர் திராட்சை, கற்கண்டு, சர்க்கரை, பழ வகைகள் இவற்றுள் உங்களால் எது முடியுமோ அதை வாங்கி வைத்து தினசரி இறைவனுக்கு படைத்து பூஜை செய்யலாம். நைவேத்யம் செய்த பிறகு மீதமுள்ள உணவை கலந்து எல்லாருக்கும் கொடுங்கள். இதை சாப்பிடுபவர் எல்லாரும் பலனடைவர். (Gettyimages)
இறைவனுக்கு பூஜை செய்யும் பொருட்களில் முக்கியமான ஒன்று பூக்கள். செயற்கை பூக்கள், பிளாஸ்டிக் பூக்கள் போன்றவை பூஜைக்கு பயன்படுத்த வேண்டாம். இயற்கையான நறுமணம் கமழும் பூக்களை கொண்டு பூஜை செய்யுங்கள். 
(6 / 7)
இறைவனுக்கு பூஜை செய்யும் பொருட்களில் முக்கியமான ஒன்று பூக்கள். செயற்கை பூக்கள், பிளாஸ்டிக் பூக்கள் போன்றவை பூஜைக்கு பயன்படுத்த வேண்டாம். இயற்கையான நறுமணம் கமழும் பூக்களை கொண்டு பூஜை செய்யுங்கள். (Gettyimages)
பூஜையின் இறுதி கட்டத்தில்தான் கற்பூர ஆராதனை காட்டவேண்டும். அப்போது உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை இறைவனுக்காக சமர்ப்பிக்கலாம். பொதுவாக பூஜையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும் குடும்பத்தில் உள்ள மூத்த ஆண் பூஜை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.  
(7 / 7)
பூஜையின் இறுதி கட்டத்தில்தான் கற்பூர ஆராதனை காட்டவேண்டும். அப்போது உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை இறைவனுக்காக சமர்ப்பிக்கலாம். பொதுவாக பூஜையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும் குடும்பத்தில் உள்ள மூத்த ஆண் பூஜை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.  (Gettyimages)
:

    பகிர்வு கட்டுரை