தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hindu Gods: தெய்வங்களின் கைகளில் ஆயுதங்கள் ஏன்?.. தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள்!

Hindu Gods: தெய்வங்களின் கைகளில் ஆயுதங்கள் ஏன்?.. தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள்!

Jan 31, 2024, 07:15 AM IST

அன்பே வடிவிலான தெய்வங்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்தியிருப்பது பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை இதோ..!

  • அன்பே வடிவிலான தெய்வங்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்தியிருப்பது பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை இதோ..!
வேலுக்கு செய்யும் பூஜையை நாம் முருகனுக்கே செய்வதாக பக்தர்கள் கருதுவதும் உண்டு. பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது வேலும் சூலமும் சக்கரமும் முந்திவந்து காக்கும் என்பதுதான் ஐதிகம்.
(1 / 6)

முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் கையில் அங்குசம், பாசக் கயிறு இருக்கும். தன்னை அடக்கும் அங்குச பாசத்தைத் தானே கையில் ஏந்தி, சுயக்கட்டுப்பாடு மூலம் யோக நிலையில் குண்டலினி சக்தியை மேலே கொண்டு செல்ல ஆயுதங்கள் சுமக்கிறார் விநாயகர். அசுரர்களை அழிக்க விநாயகர், 29 ஆயுதங்களை எடுத்து வரிசைப்படுத்துகிறார். அங்குசம், தந்தம், வேதானம், சக்தி, வில், சக்கரம் முதலான 29 ஆயுதங்கள் விநாயகருக்கு உரியன.
(2 / 6)

ஆயுதங்கள் அதிகம் கொண்ட கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.அங்குசம், பாசம் (கயிறு), வில், அம்பு, கத்தி, கேடயம், வாள், கோடாரி, சூலம், கதாயுதம், சங்கு, சக்கரம், வஜ்ரம், தண்டம், உளி, தோமரம் (உலக்கை), கரும்புவில், மலரம்பு முதலானவை முருகனின் ஆயுதங்கள் ஆகும்.
(3 / 6)

சிவபெருமானுக்கு "நெற்றிக்கண்" நெருப்பே பேராயுதம். ஆனாலும், திரிசூலம், மழுவும் பிரதான ஆயுதங்கள் ஆகும்.
(4 / 6)

சிவனைப் போலவே அம்பிகையும் 'சூலம்' ஏந்தியவள். பாசாங்குசமும், கரும்பும் கையில் உடையவள். தாமரைப் பூ, கிளி, பாசக்கயிறு, மழு, வாள், கேடயம், வில், அம்பு ஆகிய எட்டும் "அஷ்டபுய அதிரங்கள்" எனக் கொண்டுள்ளாள்.
(5 / 6)

முருகனுக்கு வேல் முக்கியமானது போல், திருமாலுக்கு சுதர்சன சக்கரம் பிரதானமாய் உள்ளது. சக்கரத்து ஆழ்வார் என்றே போற்றுவர். வலது கையில் சுதர்சன சக்கரம், இடது கையில் பாஞ்சசன்ய சங்கு, கெளமோதகி கதாயுதம், நாந்தகம் வாள், சாரங்கம் வில்லுடன் பஞ்சாயுதப் பெருமாள் காட்சி தருகிறார்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை