தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pm Modi's Range Rover Car: பிரதமர் மோடி பயன்படுத்தும் காரில் இத்தனை வசதிகளா?

PM Modi's Range Rover Car: பிரதமர் மோடி பயன்படுத்தும் காரில் இத்தனை வசதிகளா?

Feb 09, 2024, 08:23 PM IST

பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வரும் ரேஞ்ச் ரோவர் செண்டினல் கார் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

  • பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வரும் ரேஞ்ச் ரோவர் செண்டினல் கார் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.
பிரதமர் நரேந்திர மோடி ரேஞ்ச் ரோவர் செண்டினல் (Range Rover Sentinel) என்ற சொகசு காரையும் பயன்படுத்தி வருகிறார். மிகவும் பிரத்யேகமான இந்த SUV காரை பிரதமருக்கென்றே இங்கிலாந்தைச் சேர்ந்த Special Vehicle Operations (SVO) பிரிவினர் வடிவமைத்துள்ளனர்.
(1 / 9)

தேர்தல் பிரசாரம், பேரணி, அரசு ரீதியான பயணம் போன்ற அனைத்திற்குமே இந்த சொகுசு காரில் பயணிப்பதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த ரேஞ்ச் ரோவர் காரில் வேறு எந்த காரிலும்  இல்லாத பல அதிநவீன வசதிகளும் சிறப்பம்சங்களும் உள்ளதால் மற்ற வாகனங்களை விட இது தனித்துவமாக கருதப்படுகிறது. 
(2 / 9)

மிகப்பெரிய ரேஞ்ச் ரோவர் செண்டினல் SUV கார் முழுதும் அதிக திறன் வாய்ந்த குண்டு துளைக்காத கண்ணாடிகள் உள்ளது. இதனால் காருக்குள் அமர்ந்து பயணிவர்களுக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் ஏற்படுவதில்லை. 
(3 / 9)
மிகப்பெரிய ரேஞ்ச் ரோவர் செண்டினல் SUV கார் முழுதும் அதிக திறன் வாய்ந்த குண்டு துளைக்காத கண்ணாடிகள் உள்ளது. இதனால் காருக்குள் அமர்ந்து பயணிவர்களுக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் ஏற்படுவதில்லை. 
எவ்வளவு அதிகமான துப்பாக்கி குண்டுகளையும், வெடி மருந்துகளையும், ரசாயன தாக்குதல்களையும் தாங்கும் அளவிற்கு இதன் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
(4 / 9)
எவ்வளவு அதிகமான துப்பாக்கி குண்டுகளையும், வெடி மருந்துகளையும், ரசாயன தாக்குதல்களையும் தாங்கும் அளவிற்கு இதன் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
எதிர்பாராத விதமாக திடீரென தீவிரவாதிகள் அல்லது வேறு யாராவது தாக்குதல் நடத்தினாலும் கூட இந்தக் காருக்குள் இருப்பவர்களுக்கு சிறு காயம் கூட ஏற்படாது. அந்தளவிற்கு இதன் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
(5 / 9)
எதிர்பாராத விதமாக திடீரென தீவிரவாதிகள் அல்லது வேறு யாராவது தாக்குதல் நடத்தினாலும் கூட இந்தக் காருக்குள் இருப்பவர்களுக்கு சிறு காயம் கூட ஏற்படாது. அந்தளவிற்கு இதன் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.(gettyimages)
முன்புற ஜன்னல் கதவு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான ஆவணங்களை கொடுப்பதற்கு வசதியாக இந்த கண்ணாடியை 150 மிமீ மட்டுமே திறக்க முடியும். அப்போதும் கூட காரின் உள்ளே இருப்பவரை வெளியிலிருந்து பார்க்க முடியாது. 
(6 / 9)

எமர்ஜென்சி அல்லது தாக்குதல் நடக்கும் சமயத்தில், இந்தக் கார் பஞ்சர் ஆனாலும் கூட எந்தவித தடங்கலும் இல்லாமல் சராசரியாக 80 கி.மீ வேகத்தில் 50 கி.மீ தூரம் வரை செல்லும் வசதியைக் கொண்டுள்ளது.
(7 / 9)
எமர்ஜென்சி அல்லது தாக்குதல் நடக்கும் சமயத்தில், இந்தக் கார் பஞ்சர் ஆனாலும் கூட எந்தவித தடங்கலும் இல்லாமல் சராசரியாக 80 கி.மீ வேகத்தில் 50 கி.மீ தூரம் வரை செல்லும் வசதியைக் கொண்டுள்ளது.(ANI)
பல சிறப்பம்சங்கள் கொண்ட ரேஞ்ச் ரோவர் செண்டினல் SUV கார், 5.0 லிட்டர் V8 சூப்பர் சார்ஜ் பெட்ரோல் இஞ்சினில் இயங்குகிறது. ஜீரோ பாயிண்டில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 10.4 நொடிகளில் அடையக்கூடிய திறன் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 193 கி.மீ வேகம் வரை செல்லும். 
(8 / 9)
பல சிறப்பம்சங்கள் கொண்ட ரேஞ்ச் ரோவர் செண்டினல் SUV கார், 5.0 லிட்டர் V8 சூப்பர் சார்ஜ் பெட்ரோல் இஞ்சினில் இயங்குகிறது. ஜீரோ பாயிண்டில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 10.4 நொடிகளில் அடையக்கூடிய திறன் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 193 கி.மீ வேகம் வரை செல்லும். (ANI)
பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி தொடக்கத்தில் புகழ்பெற்ற இந்தியத் தயாரிப்பான மாருதி சுஸூகி எஸ்டீம் காரைப் பயன்படுத்தினார். பின்னாட்களில் ரேஞ்ச் ரோவருக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
(9 / 9)
பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி தொடக்கத்தில் புகழ்பெற்ற இந்தியத் தயாரிப்பான மாருதி சுஸூகி எஸ்டீம் காரைப் பயன்படுத்தினார். பின்னாட்களில் ரேஞ்ச் ரோவருக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. (AFP)
:

    பகிர்வு கட்டுரை