தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tasmac: டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லை! எனவே கள்ளச்சாராயம் குடிக்கின்றனர்! பேரவையில் துரைமுருகன் ஜாலி டாக்!

TASMAC: டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லை! எனவே கள்ளச்சாராயம் குடிக்கின்றனர்! பேரவையில் துரைமுருகன் ஜாலி டாக்!

Jun 29, 2024, 05:45 PM IST

TN Assembly 2024 Live: டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லாததால் கள்ளச்சாராயத்தை மக்கள் வாங்குவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்

  • TN Assembly 2024 Live: டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லாததால் கள்ளச்சாராயத்தை மக்கள் வாங்குவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்
டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லாததால் கள்ளச்சாராயத்தை மக்கள் வாங்குவதாக அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார். 
(1 / 7)

சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் பேசிய பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி, ‘கள்ளசாராயமாக இருந்தாலும், நல்ல சாராயமாக இருந்தாலும் அதை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும்’ என தெரிவித்தார். 
(2 / 7)

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், டாஸ்மாக் சரக்கில் ’கிக்’ இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர். டாஸ்மாக் கடையில் விற்கப்படும் சரக்கு ’Soft Drinks’ போல் உள்ளதாக குறிப்பிட்டார். 
(3 / 7)

பலரும் பூரண மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர். கலைஞர் சொன்னதை நினைவுபடுத்துகின்றேன்.   தமிழ்நாட்டை சுற்றி உள்ள ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியில் மதுவிற்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் எப்படி இதை பரவாமல் தடுக்க முடியும் என்று சொன்னதை துரைமுருகன் நினைவுகூர்ந்தார். 
(4 / 7)

உழைப்பவர்கள் அசதியை போக்க மதுதேவை, ஆனால் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றது
(5 / 7)

கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷனை திறக்க முடியுமா?, மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது என துரைமுருகன் கூறினார். 
(6 / 7)

கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் வேண்டும். நடந்தது நல்லதாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை